தோர்: த டார்க் வேர்ல்டு
தோர்: த டார்க் வேர்ல்டு (ஆங்கிலம்: Thor: The Dark World) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஆலன் டெய்லர் என்பவர் இயக்க மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இது 2011 இல் வெளியான தோர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியும், மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் எட்டாவது திரைப்படமும் ஆகும். தோர் என்ற கதாபாத்திரத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் என்பவர் நடிக்க இவருடன் சேர்ந்து நேடலி போர்ட்மன், டாம் ஹிடில்ஸ்டன், அந்தோணி ஹோப்கின்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட், இட்ரிசு எல்பா, கிறிஸ்டோபர் எக்லெஸ்டன், அடேவாலே அகின்னுயோ-அக்பாஜே, கேட் டென்னிங்ஸ், ரே ஸ்டீவன்சன், சக்கரி லேவி, தடனோபு அசனோ, ஜெய்மி அலெக்சாண்டர், ரெனே ருஸ்ஸோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். தோர்: த டார்க் வேர்ல்டு என்று படம் நவம்பர் 8, 2013 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது திரைப்படம் ஆகும். இப் படம் உலகளவில் 644 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. மற்றும் 2013 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த எட்டாவது படமாக அமைந்தது. இதன் தொடர்சியாக 2017 ஆம் ஆண்டு தோர்: ரக்னராக் மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்கள் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் மொழியில் தோர்: இருண்ட உலகம் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி 2013 இல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது. கதை சுருக்கம்ஜேன் ஃபாஸ்டரின் ஆராய்ச்சி ஒன்றின் போது திடீரென உயிர்ப்பெறும் ‘மேல்கித்’ இனத்தின் தலைவன், மீண்டும் தன் படைகளைத் திரட்டி ஆஸ்காடின் மீது போர் தொடுக்கிறான். அதோடு பூமியில் இருக்கும் ஜேன் ஃபாஸ்டரின் உடம்பில் தனக்குத் தேவையான சக்தி ஒன்று இருக்கவே, தங்கள் கிரக இயந்திரத்தை பூமியில் நிலைநிறுத்தி, மொத்த பிரபஞ்சத்தையும் கைப்பற்ற நினைக்கிறான். ‘மேல்கித்’ நினைத்ததை சாதித்தார்களா? அவர்களை எதிர்த்து ‘தோர்’ என்ன செய்கிறான்? சிறையிலிருக்கும் சகோதரன் லோகி என்னவானான்? தோர் - ஜேன் ஃபாஸ்டர் காதல் என்னவாகிறது என பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது திரைக்கதை. நடிகர்கள்
படப்பிடிப்பில்முதன்மை புகைப்பட பார்ன் வூட், சர்ரே செப்டம்பர் 10, 2012 அன்று தொடங்கியது. ஒரு சில வாரங்கள் கழித்து, கிளைவ் ரஸ்ஸல் நடித்தார். மாத இறுதியில், Jaimie மழை நடைபயிற்சி போது அவர் வழுக்கி பின்னர் அலெக்சாண்டர், லண்டன் படப்பிடிப்பு காயமடைந்தார். படப்பிடிப்பு நடந்தது ஷெப்பர்ட்டன் ஸ்டுடியோஸ் அக்டோபர் முதல் டிசம்பர் 2012 வரை. பாக்ஸ் ஆபிஸில்நவம்பர் 28, 2013, தோர் போல்: டார்க் உலக $ 554,562,000 ஒரு உலகளாவிய மொத்த வட அமெரிக்காவில் $ 173,562,000 மற்றும் பிற நாடுகளில் உள்ள $ 381,000,000 பெற்றார். இது வெளியான 19 நாட்களுக்குள் அதன் முன்னோடி முறியடிக்கப்பட்டுள்ளது. 2011ல் தோரின் முதல் பாகம் வெளியானது. உலக அளவில் 450 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இரண்டாவது பாகமான தோர் - தி டார்க் வேர்ல்ட் அதைவிட அதிகம் வசூலிக்கும் என்பதை படத்தின் ஓபனிங் நிரூபித்திருக்கிறது. மூன்றே தினங்களில் 109 மில்லியன் டாலர்கள். யுகே-யில் இப்படம் 3 தினங்களில் 13.4 மில்லியன் டாலர்களும், ஃப்ரான்சில் 9.4 மில்லியன் டாலர்களும், மெக்சிகோவில் 8.2 மில்லியன் டாலர்களும், பிரெசிலில் 8.1 மில்லியன் டாலர்களும், ஜெர்மனியில் 7.9 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது. மேலும் பல நாடுகளில் படம் வெளியாகும் போது - குறிப்பாக சீனா - படத்தின் வெளிநாடு வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ச்சியான தொடர்கள்தோர்: ரக்னராக்தோர்: லவ் அண்ட் தண்டர்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia