கிறிஸ்டோபர் ஹெம்ஸ்வொர்த் (ஆங்கிலம்: Christopher Hemsworth)[1] (பிறப்பு: 11 ஆகத்து 1983)[2] என்பவர் ஆத்திரேலிய நாட்டு நடிகர் ஆவார். இவர் ஹாலிவுட்டில் ஒரு திரைப்பட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற ஆத்திரேலிய நாட்டு தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்து முக்கியத்துவம் பெற்றார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் தோர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் அறியப்படும் நடிகராகவும் மற்றும் உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ஆனார்.[3][4]
கிறிஸ்டோபர் ஹெம்ஸ்வொர்த் ஆகத்து 11, 1983 ஆம் ஆண்டு மெல்பேர்னில் பிறந்தார். இவரின் தாயார் ஒரு ஆங்கில பாட ஆசிரியை மற்றும் தந்தை ஒரு சமூக சேவை ஆலோசகர் ஆவார்.[5][6] இவர் ஹீத்மாண்ட் என்ற கல்லூரியில் உயர்நிலை படிப்பை படித்தார். இவருக்கு லியம் ஹெம்ஸ்வர்த் மூத்தசகோதரும் மற்றும் லூக் ஹெம்ஸ்வர்த் என்ற இளையசகோதரும் உண்டு. இவர்களும் நடிகர்களாக உள்ளனர்.
தொழில்
இவர் 2002 ஆம் ஆண்டு முதல் சில தொலைக்காட்சி தொடர்களில் சிறிய வேடங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு 'ஹோம் அண்ட் அவே' (2004-2007) என்ற தொலைக்காட்சித் தொடரில் கிம் ஹைட் என்ற வேடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு 'ஸ்டார் ட்ரெக்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரைப்படத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து அதே ஆண்டில் 'அ பர்ஃபெக்ட் கெட்டவே காலே' மற்றும் 2010 இல் 'காஷ்' என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் 2010 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இசுபானிய நடிகை மற்றும் வடிவழகியான எல்சா படாகி என்பவர் காதலித்து வந்தார், டிசம்பர் 2010ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு இந்தியா ரோஸ் என பெயர்சூட்டப்பட்டது. மார்ச் 2014 இல் டிரிசுதான் மற்றும் சாஷா என்ற இரட்டை மகன்கள் பிறந்தது.
↑Hemsworth, Chris (25 June 2012). Kristen and Chris' Interview with Paul (Radio interview). YouTube. Event occurs at 04:35. Archived from the original on 22 July 2013. Retrieved 9 October 2018. Because I couldn't pronounce Christopher, I'd say 'Kiptoder', and that became [my childhood nickname] Kip.