கிளிஞ்சல்கள்
கிளிஞ்சல்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் மற்றும் பலர் நடித்திருந்தனர். கதைக்களம்ஒரு இந்து சமயத்தைச் சார்ந்த இளைஞன் பாபு, கிறித்தவப் பெண்ணான ஜூலியைக் காதலிக்கிறார். ஆனால், சமய வேறுபாடு காரணமாக இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கடும் எதிர்ப்பையும் மீறி, பாபு, ஜூலி இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கிறார்கள். ஜூலியின் தந்தை சுடீபன் அவரை ஒரு அறையில் பூட்டி வைக்கிறார். அதே நேரத்தில் பாபுவின் தந்தை மாணிக்கமும் அவரை வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ஜூலி தற்கொலை செய்து கொள்கிறார். இதைக் கேட்ட பாபு சுடுகாட்டிற்கு விரைந்து சென்று ஜூலியின் உடலை தகனம் செய்யும் போதே இறந்து விடுகிறார். பாடல்கள்இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[1][2] "விழிகள் மேடையாம்" என்ற பாடல் ரேவதி இராகத்தில் அமைக்கப்பட்டது.[3]
வெளியீடும் வரவேற்பும்இத்திரைப்படம் 1981 திசம்பர் 25 அன்று திரைக்கு வந்தது.[4][5] கல்கி இதழின் விமர்சகர் நளினி இத்திரைப்படத்தின் கதை மிகவும் பழையது என்றும் காலத்திற்கேற்றதல்ல என்றும் விமர்சித்திருந்தார்.[6] இத்திரைப்படம் வசூல்ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்ததோடு 175 நாள்கள் வெற்றிகரமாக ஓடியது.[7][8] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia