கிளென் ஜேம்சு மாக்சுவெல் (Glenn James Maxwell, பிறப்பு: 14 அக்டோபர் 1988) ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் விக்டோரிய மாநில துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். ஆத்திரேலிய தேசிய அணியில் தேர்வு, ஒருநாள், இருபது20 போட்டிகளிலும் விளையாடி வருகிறார். இவர் வலக்கை புறத்திருப்பப் பந்துவீச்சாளராகவும், வலக்கைத் துடுப்பாட்ட வீரராகவும் உள்ளார்.[2]
2013 பெப்ரவரியில், இந்தியன் பிரீமியர் லீக்கின்மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.[3] 2013 மார்ச் மாதத்தில் தனது முதலாவது தேர்வு ஆட்டத்தை இந்திய அணிக்கு எதிராக ஐதராபாதில் விளையாடினார்.[4] 2017 நவம்பரில், தனது முதலாவது இரட்டைச் சதத்தை (278) செஃபீல்டு சீல்டு போட்டியில் எடுத்தார்.[5][6] 2023 அக்டோபரில், உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் மிக விரைவான சதத்தைப் பதிவு செய்தார். நெதர்லாந்துக்கு எதிராக 40 பந்துகளை எதிர்கொண்டு இந்தச் சாதனையை அடைந்தார்.
2023 நவம்பரில், உலகக்க்கிண்ணத்தில் அதிவேக இரட்டைச் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும்,[7] பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் அடித்த ஒரே ஆத்திரேலியர் என்ற சாதனையையும் படைத்தார்.[8]
இந்தியன் பிரீமியர் லீக்
2012
2012 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த அணியில் இடம்பெற்றிருந்த டிராவிஸ் பிட் அணியிலிருந்து பின்வாங்கியதனால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதிரடி மட்டையாளராகவும் , வலது கை புறத்திருப்பபந்து வீச்சாளராகவும் சிறந்த களதடுப்பாளராகவும் சகலத் துறையராக விளங்கி அணியில் சிறப்பாக செயல்பட்டார்.[9]
இந்தியன் பிரீமியர் லீக் நிருவாகத்தின் கொள்கையின்படி இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின் இவரை கிங்சு இலெவன் பஞ்சாபு அணி இவரை 6 கோடிரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. 2014 இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார். இந்தப் போட்டியில் 43 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 15 நான்குகளுக், இரு ஆறுகளும் அடங்கும். இதனால் 206 எனும் இலக்கினை 18.5 ஓவர்களில் எடுத்து வெற்றி பெற உதவினார். பின் இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற உதவினார். மூன்றாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கான மூன்றாவது போட்டியில் 43 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 9 ஆருகளும், ஐந்து நான்குகளும் அடங்கும். அணிஅயை வெற்றிபெறச் செய்து ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். இது இவர் பெறும் மூன்றாவது ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். மே 7, 2014 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 90 ஓட்டங்கள் எடுத்தார். இதில் ஆறு நான்குகளும், எட்டு ஆறுகளும் அடங்கும்.மேலும் சுரேஷ் ரைனாவின் இலக்கினை வீழ்த்தினார். நான்காவது முறையாக ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார். இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 231 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி எனும் சாதனையைப் படைக்க உதவினார்.[10] இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் தரவரிசையில் மூன்ராவது இடம் பிடித்தார். இவரின் சராசரி 34.50 ஆகும்.[11]
2015
2015 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலும் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடினார். ஆனால் இந்தத் தொடரில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறினார். 11 போட்டிகளில் விளையாடி 145 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். அதிகபட்ச ஓட்டம் 43, இவரின் சராசரி 13.18 ஆகும்.[12]
சிறப்பான செயல்பாடுகள்
மட்டையாடியது
ஓட்டங்கள்
போட்டி
இடம்
பருவம்
தேர்வுத் துடுப்பாட்டம்
104
ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி v இந்தியத் துடுப்பாட்ட அணி
மாக்சுவெல் 2022 மார்ச்சில் நீண்டகாலம் நட்பில் இருந்த வினி இராமன் என்ற இந்திய வம்சாவளுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.[19][20][21] இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.[22]
மேற்கோள்கள்
↑"Glenn Maxwell". cricket.com.au. Cricket Australia. Archived from the original on 2014-07-03. Retrieved 15 சனவரி 2014.