கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி
கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி (K.A.P. Viswanatham Government Medical College) என்பது தமிழ்நாடு மாநில அரசால் நடத்தப்படும் ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும்.[1] இது இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] இம்மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரில் மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டில் கல்லூரி மாணவர்களிடையேயான சேர்க்கைத் தேர்வில் இக்கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றது.[3] அங்கீகாரமும் இணைப்பும்கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (முன்னர் அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை என அழைக்கப்பட்டது) கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள இக்கல்லூரி மருத்துவமனையாகும். வசதிகள்இக்கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. கல்லூரி வளாகத்தில் மூன்று மாணவர்களுக்கான விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் உள்ளன. இக்கல்லூரியில் சுமார் 750 பேர் அமரும் வகையில் கலையரங்கம் ஒன்றினைக் கொண்டிருக்கிறது. 150க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட நான்கு விரிவுரை அரங்குகள் உள்ளன. 7,000 புத்தகங்கள் மற்றும் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்கள் கொண்ட மத்திய நூலகம் வளாகத்தில் அமைந்துள்ளது. இரண்டு வாசிப்பு அரங்குகள் கொண்ட இதில், ஒன்று முதுநிலை பட்டதாரிகளுக்கும், மற்றொன்று பேராசிரியர்களுக்கும் உள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகளும் உள்ளன. இதில் ஒரு உடற்பயிற்சிக்கூடம், கூடைப்பந்து மைதானம், இறகுப் பந்து மைதானம், இறகுப் பந்தாட்ட மைதானம் மற்றும் இரண்டு கைப்பந்து மைதானங்கள் உள்ளன. வட்டப் பந்து, தூக்கு பந்து, மட்டைப் பந்து, கால் பந்து ஆகியவற்றை விளையாடும் வசதியும் அமைந்துள்ளன. வழங்கப்படும் படிப்புகள்இளங்கலை மருத்துவம்
முதுநிலை மருத்துவ படிப்புகள்
சிறப்புப் பாடங்கள்
பட்டயப் படிப்புகள்
தொழில்நுட்ப படிப்புகள்
பிற படிப்புகள்
வகுப்புகள் மற்றும் நுழைவு ஆண்டுகள்எம்.பி.பி.எஸ் மாணவர்களின் ஒவ்வொரு வகுப்பும் மருத்துவப் பள்ளியில் நுழைந்த ஆண்டைக் குறிக்கும் ஒரு (அதிகாரப்பூர்வமற்ற) பெயரை தனக்கு ஒதுக்கியுள்ளது. சமீபத்திய தொகுதிகள்
இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia