அமெரிக்க கடற்படைத் தளபதி கென்னத் குபிஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை கேப்டன் டைகே ரிச்சர்ட்சன் ஆகியோர் கோடாபாடோவைச் சேர்ந்த 12 வயது சிறுமியான மேரிலின் கன்சிக்கு கண்புரை கண் அறுவை சிகிச்சையின் போது இயக்க நுண்ணோக்கியைப் பயன்படுத்துகின்றனர்.
கண் மருத்துவர் என்பவர் கண் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரைக் குறிப்பதாகும்.[3][4] மருத்துவத்தில் பட்டமும், அதைத் தொடர்ந்து கண் மருத்துவத்தில் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் உறைவிடப் பயிற்சியும் பெற்று இருப்பர். கண் மருத்துவத்திற்கான உறைவிடப் பயிற்சி திட்டங்களுக்கு உள் மருத்துவம், குழந்தை மருத்துவம் அல்லது பொது அறுவை சிகிச்சை ஆகியவற்றில் பயிற்சியுடன் ஒரு வருட உள்ளகப் பயிற்சியும் தேவைப்படலாம். கண் நோயியலின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கூடுதல் சிறப்புப் பயிற்சி பெறப்படலாம்.[5]
கண் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், ஒருங்கொளி சிகிச்சையை செயல்படுத்துவதற்கும், தேவைப்படும்போது அறுவை சிகிச்சை செய்வதற்கும் கண் மருத்துவர்கள் மருந்துகளைப் பரிந்துரைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.[6] கண் மருத்துவர்கள் கண் நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பற்றிய கல்வி ஆராய்ச்சியில் பங்கேற்கலாம்.[7]
நோய்கள்
கண் மருத்துவர்களால் சிகிச்சையளிக்கப்படும் பொதுவான நோய்களின் ஒரு பகுதி பட்டியல் பின்வருமாறு:[8]
இந்திய அறுவைச் சிகிச்சை நிபுணரான சுஷ்ருதர் சுமார் ஆறாவது நூற்றாண்டில் சமசிகிருதத்தில்சுஷ்ருதாவை சம்ஹிதா எனும் நூலினை எழுதினார்[11]. அதில் 76 விழியின் நோய்கள் விவரிக்கப்பட்டுள்ளது (இவற்றில், 51 அறுவை சிகிச்சை) அத்துடன் பல கண் சார்ந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.[12][13]கண்புரை அறுவை சிகிச்சை பற்றிய அவரது விளக்கம் புரைவில்லை நெறித்தல் முறையுடன் இணக்கமாக இருந்தது.[14] அவர் முதல் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.[15][16]
↑"ophthalmology". Oxford Dictionary. Archived from the original on 9 ஜூலை 2016. Retrieved 14 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
↑Agarwal, R.K. (1965), Ancient Indian Ophthalmology, The Ophthalmic Optician, 5(21),1093-1100 (the title of this journal was changed to Optometry Today in 1985), published by the Association of Optometrists, London, England.
↑Roy, P.N., Mehra, K.S. and Deshpande, P.J. (1975), Cataract surgery performed before 800 BC, British Journal of Ophthalmology, 59, page 171
↑Kansupada, K. B.; Sassani, J. W. (1997). "Sushruta: The father of Indian surgery and ophthalmology". Documenta Ophthalmologica. Advances in Ophthalmology93 (1–2): 159–167. doi:10.1007/BF02569056. பப்மெட்:9476614.