கீட்டோடொன்டைடீ
கீட்டோடொன்டைடீ (Chaetodontidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு பட்டாம்பூச்சி மீன் [1] குடும்பம் ஆகும். இவை வெப்பவலயக் கடல் வாழ் மீன்கள். பொதுவாகப் பவளப்பாறைத் திட்டுக்களில் வாழும் இக் குடும்ப மீன்கள் அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களில் காணப்படுகின்றன. இக் குடும்பத்தில் 10 பேரினங்களில் ஏறத்தாழ 120 இனங்கள் உள்ளன. இந்தியப் பெருங்கடலிலும், பசிபிக் பெருங்கடலிலும் பல இன இணைகள் (Species pair) காணப்படுகின்றன. மிகப் பெரிய கீட்டோண்டன் பேரினத்தின் உறுப்பினங்கள் உண்மையில் இனங்களா அல்லது சிற்றினங்களா என்பதில் குழப்பம் நிலவி வந்தது. அண்மைக் காலத்தில், டிஎன்ஏ க்களைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட ஆய்வுகள் மூலம் இத்தகைய குழப்பங்கள் பல தீர்ந்துள்ளன. இவை ஓரளவு சிறிய மீன்களாகும். பெரும்பாலும் 12-22 சதம மீட்டர் (7-9 அங்குலம்) நீளம் கொண்டவை. இக் குடும்பத்தில் மிகப்பெரிதாக வளரும் கீ. எஃபிப்பியம் என்னும் இனத்தைச் சேர்ந்த மீன்கள், 30 சதம மீட்டர் நீளம் வரை வளர்கின்றன. கறுப்பு, வெள்ளை, நீலம், சிவப்பு, செம்மஞ்சள், மஞ்சள் எனப் பல நிறங்களைக் கொண்ட இம் மீன்களை ஆங்கிலத்தில் பட்டாம்பூச்சி மீன் எனப் பொருள்படும் பட்டர்ஃபிளை ஃபிஷ் (butterflyfish) என அழைப்பர். இவற்றையும் பார்க்கவும்உசாத்துணை
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia