குனியில் கைலாசநாதன்குனியில் கைலாசநாதன் (Kuniyil Kailashnathan) 1979 ஆம் ஆண்டில் தேர்ச்சிபெற்ற ஓர் இந்திய ஆட்சிப் பணியாளர் ஆவார். 1953 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாளில் கைலாசநாதன் பிறந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை குசராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது இவர் முதன்மைச் செயலாராகப் பணிபுரிந்துள்ளார். தொடக்ககால வாழ்க்கைகைலாசநாதன் தமிழ்நாட்டிலுள்ள ஊட்டியில் வளர்ந்தார். இங்கு இவரது தந்தை தபால் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். [1] தொழில்குனியில் கைலாசநாதன் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி உதவி ஆட்சியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1985 ஆம் ஆண்டில் குசராத்தின் சுரேந்திரநகர் மற்றும் 1987 ஆம் ஆண்டில் சூரத் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியளாராகப் பணியாற்றினார். குசராத் கடல் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கைலாசநாதன் இருந்தார். நகர்ப்புறத் துறையில் இவர் 1999 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை அகமதாபாத்தின் நகராட்சி ஆணையராகவும் குசராத்தின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் துறையின் முதன்மை செயலாளராகவும் பணியாற்றினார். [2] நகர்ப்புற வீட்டுவசதித் துறையிலிருந்தபோது அகமதாபாத்துக்கான பேருந்து விரைவு போக்குவரத்து திட்டத்தை உருவாக்கிய வழிநடத்தல் குழுவுக்கு தலைமை தாங்கினார். 2013 ஆம் ஆண்டு மே மாதம் 31 அன்று குசராத் முதலமைச்சர் அலுவலகத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக ஓய்வு பெற்றார். [3] அரசுப் பணியில் 33 ஆண்டு கால சேவை முடிந்தது என்றாலும் முதலமைச்சர் அலுவலகத்தில் தலைமை முதன்மை செயலாளராக தக்கவைக்கப்பட்டார், இப்பதவி கைலாசநாதனுக்காக உருவாக்கப்பட்டது. கல்விசென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுநிலைப் பட்டமும் வேல்சு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia