சுரேந்திரநகர்
சுரேந்திரநகர் (Surendranagar) குஜராத் மாநிலத்தில் ஒரு பெரிய நகரமும் மாநகராட்சியும் ஆகும். சுரேந்திரநகரின் சகோதரி நகரம் வாத்வான் நகரம் ஆகும். சுரேந்திரநகரின் மக்கட்தொகையை ஒப்பிடும் போது, கல்வித் துறையில் சுரேந்திரநகர் குஜராத் மாநிலத்தில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. சௌராஷ்டிர தீபகற்பத்திற்கு செல்லும் வாயிலாக சுரேந்திரநகர் அமைந்துள்ளது.[1] சுரேந்திரநகர் மக்கட்தொகை சுமார் 2,00,000 ஆகும். பொருளாதாரம்உயர்ரக பருத்தி நூலான சங்கர் பருத்தி நூல் தயாரிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் உப்பில் 25 விழுக்காடு சுரேந்திரநகர் சுரங்கங்களிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. மின் சாதனங்கள், ரொட்டி, பீங்கான், மருத்துவமனை மருந்துகள், இயந்திரவியல் தளவாடங்கள், பிலாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பில் அதிகமான சிறு மற்றும் குறு தொழில் கூடங்கள் கொண்டுள்ளது. சுரேந்திரநகர் மிகப்பெரிய மொத்த விற்பனை தானிய சந்தைகள், நகை மாளிகைகள், ஜவுளிச் சந்தைகள், (குறிப்பாக சேலைகள்) கொண்டுள்ளது. இந்தியாவில் இங்கு மட்டுமே நகைத் தொழிலாளர்களுக்கு, செயத வேலையின் விழுக்காடு விகிதத்தில் கூலி வழங்கப்படுகிறது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia