குபாங் கிரியான்
குபாங் கிரியான் (மலாய் மொழி: Kubang Kerian; ஆங்கிலம்: Kubang Kerian) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் அரச நகரமும் ஆகும்.[1] மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 5 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 445 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரில் கிளாந்தான் மாநில அரசரின் அரண்மனை உள்ளது. அத்துடன் கிளாந்தான் சுல்தானின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் உள்ளது. பொதுகுபாங் கிரியானில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள். இதனால் ஏராளமான பள்ளிவாசல்கள் உள்ளன. மிகப்பெரிய பள்ளிவாசல் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா பள்ளிவாசல் (Sultan Ismail Petra Mosque) ஆகும். நீலப் பள்ளிவாசல் (Blue Mosque) என்றும் அழைக்கப்படுகிறது. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (University of Science, Malaysia) சுகாதார வளாகம் (Health Campus) இந்த நகரில் அமைக்கப்பட்டு உள்ளது. 723 படுக்கைகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மருத்துவமனையும் (Hospital Universiti Sains Malaysia) உள்ளது.[1][2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia