கும்மியாட்டம்

கும்மி

கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நடனக் கலை ஆகும். பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தம் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. இது பொதுவாக முளைப்பாரியின்போது பெண்கள் வட்டமாக நின்று கைதட்டி ஆடும் நடனம் ஆகும்.[1] தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது. குரவை என்ற கலையில் இருந்து, கும்மி பிறந்ததாகக் கூறப்படுகிறது.[2]

தமிழ் இலக்கியங்களில் கும்மி

கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)
  • மடவார் கொம்மியே பாடி (அருட்பா)

காட்சியகம்

மேற்கோள்கள்

  1. "ஒயில் கும்மி ஆடலாமா?". Hindu Tamil Thisai. Retrieved 2021-12-07.
  2. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. Retrieved 2012-07-22.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya