குருச்சேத்திரப் பல்கலைக்கழகம்
குருச்சேத்திரப் பல்கலைக்கழகம் (Kurukshetra University) என்பது 1956ஆம் ஆண்டு சனவரி மாதம் 11ஆம் நாள் நிறுவப்பட்ட பல்கலைக்கழகமாகும்.[2] இந்தப் பல்கலைக்கழகம் இந்தியாவின் அரியான மாநிலத்தில் குருச்சேத்திரத்தில் அமைந்துள்ளது. குருச்சேத்திரா இந்தியத் தலைநகர் புது தில்லியிலிருந்து 160 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3] இது பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளது.[4] வரலாறுஇப்பல்கலைக்கழகம் 1956-ல் இணைவு பெற்ற கல்லூரிகள் இல்லா பல்கலைக்கழகமாக இருந்தது. இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவரான பாரத ரத்னா இராசேந்திர பிரசாத் பல்கலைக்கழகத்தினைத் தொடங்கிவைத்தபோது சமசுகிருத துறை மட்டுமே செயல்பட்டது.[5] சமசுகிருத அறிஞரான சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங், பஞ்சாப் மாநிலத்தின் குடியரசுத் தலைவராக இருந்தபோது இப்பல்கலைக்கழகத்தை நிறுவும் யோசனை உருவானது. 2012-ல், தத்துவவியல் துறை பகவத் கீதை பற்றிய பாடத்தை அறிமுகப்படுத்தியது.[6] வளாகம்இப்பல்கலைக்கழகத்தின் வளாக 473 ஏக்கர்கள் (1.91 km2) [5] பரப்பில் இந்துக்களின் புனித நகரமான குருசேத்திரத்தில் பிரம்மசரோவர் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.[7] கல்விதரப்படுத்துதல்1வது மற்றும் 2வது பருவத்தில் பெற்ற மதிப்பெண்களின் 20% பங்களிப்புடன், 8வது வரையிலான ஒவ்வொரு பருவமும் 10% பங்களிப்பைக் கொண்டு, தரங்களைக் கணக்கிடுவதற்கான முறையினை பல்கலைக்கழகம் பின்பற்றுகிறது.[8] தரவரிசைகள்2020-ல் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் இப்பல்கலைக்கழகம் 99வது இடத்தைப் பிடித்தது. கல்வி உலக தரவரிசை 2020ன் படி இது 68வது இடத்தில் உள்ளது [8] நிறுவனம்சிறப்பு மையம்
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள்பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்[10]
இணைவுபெற்ற கல்லூரிகள்இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் 457 இணைவு பெற்ற கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன.[2] இவற்றில் குறிப்பிடத்தக்க சில:
சாதனைகள்கல்வி2011 ஆம் ஆண்டில் மின்னணு அறிவியல் துறைக்கு, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மூலம் நானோ அறிவியல் குறித்த ஆய்விற்கு ₹2.96 கோடி (ஐஅ$3,50,000) ஒதுக்கப்பட்டது.[11] விளையாட்டுகுருசேத்ரா பல்கலைக்கழகம், விளையாட்டில் பல சாதனைகள் படைத்துள்ளது. 2015ஆம் ஆண்டில் குருசேத்ரா பல்கலைக்கழகத்தின் குத்துச்சண்டை அணி அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா முழுவதுலுமிருந்து 100க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக வீரர்கள் கலந்துகொண்ட போட்டியில் வென்றது.[12] அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டியில் ஜலந்தர் குத்துச்சண்டை பயிற்சியாளர் ராஜேஷ் குமார் ராஜவுண்டின் கீழ் குருசேத்ரா பல்கலைக்கழக வீரர்கள் 3 தங்கம் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.[13] பல்கலைக்கழகத்திற்கு மௌலானா அபுல் கலாம் ஆசாத் சுழற்கேடயம் வழங்கப்பட்டது. 966-1967ஆம் ஆண்டில் இந்திய அரசால் சர்வதேச மற்றும் தேசிய அரங்கில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு மற்றும் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்களின் செயல்திறனுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும்.[14] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia