பிரம்மசரோவர்
பிரம்ம சரோவர் (Brahma Sarovar) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் குருசேத்திர மாவட்டத்தில் உள்ள குருச்சேத்திரம் எனுமிடத்தில் அமைந்த இந்தியாவின் தொன்மை வாய்ந்த மிகப்பெரிய புனித குளம் ஆகும்.[1] இப்புனித பிரம்ம சரோவர் குளத்தில் நீராடினால் அக உடலும், புற உடலும் தூய்மையாகும் என்பது இந்து சமய மக்களின் தொன்மையான நம்பிக்கையாகும். வரலாறுஇதிகாச புராணங்களின்படி மிகப்பெரிய வேள்வி செய்தபின் குருச்சேத்திரம் எனும் இடத்திலிருந்து பிரம்மா இப்பிரபஞ்சத்தை படைத்தார். பிரம்ம சரோவரின் அமைவிடம் பண்டைய பாரத நாட்டின் நாகரீகத்தின் தொட்டில் எனக் கருதப்படுகிறது. பிரம்ம சரோவர் அமைந்த பகுதியான குருச்சேத்திரல் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பதினெட்டு நாள் பெரும் போர் நிகழ்ந்தது என மகாபாரதம் வாயிலாக அறியப்படுகிறது. பிரம்ம சரோவர் குளக்கரையில் சிவன், துர்கை கோயில்கள் அமைந்துள்ளது. குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிர்லா மந்திர், பாபாநாத் கோயில், மடாலயங்கள் அமைந்துள்ளன. தற்காலத்தில்அமாவாசை, சூரிய, சந்திர கிரகணங்களின் போது இலட்சக்கணக்காக மக்கள் நீராடும் வகையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்குளம் அண்மையில் நவீன வசதிகளுடன் 3300 அடி நீளம், 1500 அடி அகலத்துடன் செவ்வக வடிவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. படக்காட்சியகம்
ஆதார நூற்பட்டியல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia