இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.
இந்திய மாமணி[1] (பாரத ரத்னா) இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டிப் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும், இவ்விருதைப் பெரும் வகையில் நவம்பர், 2011-இல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[2] இவ்விருது பெற்றவர்களுக்குச் சிறப்புப் பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.
இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துகளும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்துக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.
1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955-ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும், அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992-இல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்குப் பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாகத் திரும்பப் பெறப்பட்டது.
விருதுக்கு தேர்வு முறை
பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவது என்பது பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் இருந்து மாறுபடுகிறது. இதில் பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் செய்வார்.
சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம். அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.பாரத ரத்னா விருது பெறுவோர் குறித்த அதிகாரபூர்வ தகவல் இந்திய அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த விருது சனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போது வழங்கப்படுகிறது.
விருது பயன்பாட்டு விதிகள்
விதி 18 (1)-இன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.[3][4]
பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கான சலுகைகள்
பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பணம் ஏதும் வழங்கப்படாது.
விருதை பெற்றவர்களுக்கு அரசு துறைகள் சார்பாக சில வசதிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாரத ரத்னா பெற்றவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான வசதி வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். முன்னுரிமை வரிசையில் இவர்களை அரசாங்கம் வைக்கும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும்.
இதேபோல், மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு சில சிறப்பு வசதிகளை வழங்கும்.[5]
விருது பெற்றோர் பட்டியல்
வண்ணங்களுக்கான குறியீடு
+ வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகன்/குடிமகள் ஆனவர்
தத்துவஞானியும், விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர்.[8][9] 1962 முதல், செப்டம்பர் 5 ஆம் தேதி இவரது பிறந்த நாள் இந்தியாவில் "ஆசிரியர் தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.[10]
மருத்துவர், விடுதலை இயக்க போராளி, மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் (1948–62).[17] அவர் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்தார் (1948–62) மற்றும் ஜூலை 1 அன்று அவரது பிறந்த நாள்., இந்தியாவில் தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.[18]
"இந்தியவின் இரும்பு பெண்" என்று அழைக்கப்படுகிறார்,[25][14] முன்னாள் இந்தியப் பிரதமர் (1966–77, 1980–84). இந்த விருதைப் பெறும் போது இவரே, இந்தியப் பிரதமராக இருந்தார்.
"புரட்சித் தலைவர்" என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகர் எம். ஜி. இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) தமிழ்நாட்டின் முதலமைச்சராக 1977 மற்றும் 1987க்கு இடையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தார். இந்திய வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான முதல் நடிகர் இவர் ஆவார். அவர் இந்திய அரசியல் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆவார்.[28]
"இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய சிற்பி",இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சமூக சீர்திருத்தவாதி[35][36][37]
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவர், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு (1993) பெற்றவர்.[38]
"இந்தியாவின் இரும்பு மனிதர்" என்று பரவலாக அறியப்படுகிறார்,[39] இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் துணை பிரதமர் (1947–50) மற்றும் உள்துறை அமைச்சராகவும் (1948–1950) இருந்தவர்.[40][41]
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தார் மற்றும் இலவச தொடக்கக் கல்வியை நோக்கி பணியாற்றினார். இவர் "மவுலானா ஆசாத்" என்று பரவலாக அறியப்பட்டார், நவம்பர் 11 அன்று இவரது பிறந்த நாள், இந்தியாவில் தேசிய கல்வி தினம் என அனுசரிக்கப்படுகிறது.[47]
திரைப்பட மேதை, ரமோன் மக்சேசே விருது (1967) பெற்றவர்.[49] 1984 ஆம் ஆண்டில், ராய்க்கு தாதாசாகெப் பால்கே விருது வழங்கப்பட்டது, இது சினிமாவில் இந்தியாவின் மிக உயர்ந்த விருது.[50]
நானாஜி தேஷ்முக் என்றும் அழைக்கப்படும் சண்டிகடாஸ் அமிர்தராவ் தேஷ்முக் (11 அக்டோபர் 1916–27 பிப்ரவரி 2010) இந்தியாவின் சமூக ஆர்வலர் ஆவார். கல்வி, சுகாதாரம், கிராமப்புற தன்னம்பிக்கை ஆகிய துறைகளில் பணியாற்றினார். அவர் பாரதிய ஜன சங்கத்தின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
↑1960 ஆம் ஆண்டில், ராமச்சந்திரனுக்கு நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது, ஆனால் அழைப்பிதழ் தமிழ் அல்லாமல் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டதால் நிராகரிக்கப்பட்டது.[34]
↑தேசாய் பிரதமர் பதவியில் இருந்தபோது விருதுகளை "மதிப்பற்றது மற்றும் அரசியல்மயப்படுத்தியது" என்பதற்காக ரத்து செய்தார்.".[42]
↑முன்னதாக, அபுல் கலாம் ஆசாத் இந்தியாவின் கல்வி அமைச்சராக இருந்தபோது (1947–58) தேர்வுக் குழுவைக் காரணம் காட்டி பாரத ரத்னா விருதை மறுத்தார்.[44][45][46]
மறைவுக்குப் பின் பெற்றவர்கள்
↑லால் பகதூர் சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று தனது 61 வயதில் காலமானார்.
↑காமராசர் 1975 அக்டோபர் 2 அன்று தனது 72 ஆவது வயதில் காலமானார்.
↑வினோபா பாவே 1982 நவம்பர் 15 அன்று தனது 87 ஆவது வயதில் இறந்தார்.
↑எம். ஜி. ராமச்சந்திரன் 1987 டிசம்பர் 24 அன்று தனது 70 ஆவது வயதில் காலமானார்.
↑அம்பேத்கர் 1956 திசம்பர் 6 அன்று தனது 65 வயதில் காலமானார்.
↑ராஜீவ் காந்தி 21 மே 1991 அன்று தனது 46 ஆவது வயதில் காலமானார்.
↑வல்லபாய் படேல் 15 திசம்பர் 1950 அன்று தனது 75 ஆவது வயதில் காலமானார்.
↑அபுல் கலாம் ஆசாத் 1958 பிப்ரவரி 22 அன்று தனது 69 ஆவது வயதில் காலமானார்.
↑அருணா ஆசஃப் அலி 29 ஜூலை 1996 அன்று தனது 87 ஆவது வயதில் காலமானார்.
↑ஜெயபிரகாஷ் நாராயண் 1979 அக்டோபர் 8 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார்.
↑கோபிநாத் போர்டோலோய் ஆகத்து 5, 1950 அன்று தனது 60 ஆவது வயதில் இறந்தார்.
↑மதன் மோகன் மாளவியா 1946 நவம்பர் 12 அன்று தனது 84 ஆவது வயதில் காலமானார்.
↑அசாரிகா 5 நவம்பர் 2011 அன்று தனது 85 ஆவது வயதில் காலமானார்.
↑தேஷ்முக் பிப்ரவரி 27, 2010 அன்று தனது 93 ஆவது வயதில் காலமானார்.
↑கர்ப்பூரி தாக்கூர், 17 பிப்ரவரி 1988 அன்று தனது 64 ஆவது வயதில் காலமானார்.
மேற்கோள்கள்
↑"GRFT3"(PDF). Tamil Nadu Public Service Commission.
↑Thelikorala, Sulakshi (18 நவம்பர் 2011). "Indira Gandhi: Iron Lady of India". Asian Tribune. World Institute For Asian Studies. Archived from the original on 1 சனவரி 2016. Retrieved 13 செப்டெம்பர் 2015.
↑Ramachandran, Sudha (24 January 2008). "India's top award misses congeniality". Asia Times Online. Bangalore. Archived from the original on 16 October 2014. Retrieved 14 May 2014.
Kevin Lee (5 செப்டெம்பர் 2002). "A Slanted Canon". Asian American Film Commentary. Archived from the original on 31 மே 2012. Retrieved 3 பெப்ரவரி 2013.
↑Singh, Kuldeep (31 சூலை 1996). "Obituary: Aruna Asaf Ali". The Independent. Archived from the original on 25 செப்டெம்பர் 2015. Retrieved 14 செப்டெம்பர் 2015.
↑Merchant, Minhaz; Bobb, Dilip; Louis, Arul B.; Sethi, Sunil; Chawla, Prabhu; Ahmed, Farzand (6 மார்ச் 2014). "Jayapraksh Narayan: A leader betrayed". India Today. Archived from the original on 6 சூலை 2015. Retrieved 17 செப்டெம்பர் 2015.
"Profile: Rao C.N.R". Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Archived from the original on 1 செப்டெம்பர் 2015. Retrieved 18 செப்டெம்பர் 2015.
"Research: Rao C.N.R". Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research. Archived from the original on 1 செப்டெம்பர் 2015. Retrieved 18 செப்டெம்பர் 2015.