குலாம் முஹம்மது ஷாகுலாம் முஹம்மது ஷா அல்லது ஜி. எம். ஷா அல்லது குல் ஷா (Ghulam Mohammad Shah - 20 ஜூலை 1920 : 6 ஜனவரி 2009) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் 2 ஜூலை 1984 முதல் 6 மார்ச் 1986 வரை ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.[1] ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் சேக் அப்துல்லா இவரின் மாமனார் ஆவார், ஷா ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் ஆரம்ப கால மூத்த உறுப்பினராக இருந்தார். பிறப்புகுலாம் முகமது ஷா ஸ்ரீநகரில் காஷ்மீர் 20 ஜூலை 1920 இல் பிறந்தார். கல்விபஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர்அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் பட்டம் பெற்றார். ஐக்கிய நாடுகளின் பெல்லோஷிப் திட்டத்தின் கீழ் வேளாண் பொருளாதாரத் துறையில் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இருந்து பெல்லோஷிப் பெற்றார்.[2] அரசியல்ஷா 1944 இல் தேசிய மாநாட்டு கட்சியில் சேர்ந்தார். அவரது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில், மக்கள் உரிமைக்கான போராட்டத்தில் பலமுறை கைது செய்யப்பட்டார். ஷா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லாவின் மூத்த மருமகனும், பாரூக் அப்துல்லாவின் மைத்துனர் மற்றும் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மாமாவும் ஆவார். 1947ல் புதிய அரசு அமைந்த பிறகு, அரசின் விநியோகம் மற்றும் விலைகளின் கட்டுப்பாட்டாளராக ஷா நியமிக்கப்பட்டார், அவர் 1953 வரை அப்பதவியை வகித்தார். 1975 ஆம் ஆண்டு இந்திரா-அப்துல்லா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட சிறைவாசத்திற்குப் பிறகு, ஷா அரசாங்கத்தில் மாநில அமைச்சராக பதவியேற்றார். 1977 தேர்தல்களில் தேசிய மாநாட்டு பிரச்சாரத்தில் மூளையாக செயல்பட்டதற்காக ஷா மிகவும் அறியப்பட்டார். பின்னர் அவர் அமைச்சராக பதவியேற்றார், போக்குவரத்து, உணவு மற்றும் விநியோகம், வர்த்தக முகமைகள், தோட்ட வேலைகள் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளை வகித்தார். ஷா 1984 இல் தனது மைத்துனரான பாரூக் அப்துல்லாவின் அரசைக் கவிழ்த்து முதலமைச்சரானார், அவர் 1984 ஜூலை 2 அன்று 12 கட்சி எம்எல்ஏக்களுடன் தேசிய மாநாட்டு கட்சியிலிருந்து விலகி ஃபரூக் அப்துல்லாவின் அரசாங்கத்தை வீழ்த்தினார். இந்த நடவடிக்கை இரு குடும்பங்களுக்கிடையே கசப்பான பிளவை உருவாக்கியது. ஷா 26 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து முதலமைச்சரானார். இருப்பினும், தெற்கு காஷ்மீரில் 1986 ஆம் ஆண்டு நடந்த அனந்த்நாக் கலவரத்தைத் தொடர்ந்து அவரது அரசாங்கம் 12 மார்ச் 1986 அன்று அப்போதைய ஆளுநர் ஜக்மோகனால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. புதிய கட்சிஜம்மு காஷ்மீர் அவாமி தேசிய மாநாட்டு கட்சி என்ற புதிய கட்சியை ஷா உருவாக்கினார், அது 2008 ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பங்கேற்றது.[3] குடும்பம்அவருக்கு பேகம் கலிதா ஷா என்ற மனைவியும், இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இறப்புஷா ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 6 ஜனவரி 2009 அன்று இறந்தார். அப்போது அவருக்கு வயது 88 [4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia