குல்னா கோட்டம்
குல்னா கோட்டம் (Khulna Division) (Bengali: খুলনা বিভাগ தெற்காசியாவின் வங்காளதேச நாட்டில் அமைந்த எட்டு கோட்டங்களில் ஒன்றாகும். இக்கோட்டம் வங்காளதேசத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ளது. குல்னா கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் குல்னா மாவட்டத் தலைமையிடமான குல்னா நகரத்தில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22284.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குல்னா கோட்டத்தின் மக்கள் தொகை 1,56,87,759 ஆகும். குல்னா கோட்ட எல்லைகள்குல்னா கோட்டத்தின் வடக்கில் ராஜசாகி கோட்டமும், தென்கிழக்கில் பரிசால் கோட்டமும், தெற்கில் வங்காள விரிகுடாவும், மேற்கில் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலமும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. புவியியல்இக்கோட்டட்தில் கங்கை ஆறு, மதுமதி ஆறு, பைரவா ஆறு மற்றும் கோபோடோக்கா ஆற்றின் வடிநிலங்களும், வங்காள விரிகுடாவில் பல தீவுகளையும் கொண்டது. உலகின் பெரிய சுந்தரவனக்காடுகள் இக்கோட்டத்தின் குல்னா மாவட்டம், சத்கீரா மாவட்டம் மற்றும் பேகர்காட் மாவட்டங்களில் வளர்ந்துள்ளது. கோட்ட நிர்வாகம்குல்னா கோட்டம் 1960-இல் நிறுவப்பட்டது.[1]22284.22 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட குல்னா கோட்டம் பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது. இக்கோட்டத்தில் பெரிய மாவட்டமான [[குல்னா மாவட்டம் 4,394.45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலும்; சிறிய மாவட்டமான மெகர்பூர் மாவட்டம் 751.62 சதுர கிலோ மீட்டர் பரப்பும் கொண்டது. இக்கோட்டம் ஒரு பெருநகர மாநகராட்சியும், 36 நகராட்சி மன்றங்களையும், 64 துணை மாவட்டங்களையும், 574 கிராம ஒன்றியக் குழுக்களையும், 6564 வருவாய் கிராமங்களையும், 9287 கிராமங்களையும், 37 வங்காளதேச நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. [2]
பொருளாதாரம்குல்னா கோட்டத்தில் பெரிய சணல் ஆலைகளும், காகித ஆலைகளும் கொண்டது. நாட்டின் இரண்டாவது பெரிய மங்களா துறைமுகமும், கப்பல் கட்டும் வளாகமும் அமைந்துள்ளது. இக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது. மக்கள் தொகையியல்22284.22 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 1,56,87,759 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 78,42,533 ஆகவும், பெண்கள் 78,45,226 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.64% ஆக உள்ளது. பாலின விகிதம் 100 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 704 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 53.2% ஆக உள்ளது.[3]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். போக்குவரத்துஆறுகளின் நீர் வழித் தடங்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இயந்திரப் படகுகள் மற்றும் பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுகிறது. கல்விவங்காளதேசத்தின் பிற கோட்டங்களைப் போன்று, இக்கோட்டத்திலும் நான்கு படிகள் கொண்ட கல்வி அமைப்பு உள்ளது. அவைகள்: ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளிகளும் (கிரேடு 1 – 5), ஐந்தாண்டு படிப்புகள் கொண்ட இடைநிலைப் பள்ளிகளும் (கிரேடு 6 – 10), இரண்டாண்டு படிப்பு கொண்ட மேனிலைப் பள்ளிகளும் (கிரேடு 11 – 12), நான்கு ஆண்டு படிப்பு கொண்ட இளநிலை பட்டப் படிப்பு மற்றும் ஒராண்டு கால முதுநிலை பட்டப் படிப்பு கொண்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும், சட்டம் மற்றும் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப பொறியியல் கல்லூரிகளும் உள்ளது. வங்காள மொழியுடன், ஆங்கில மொழியும் அனைத்து நிலைகளிலும் கற்பிக்கப்படுகிறது கல்வி நிலையங்கள்குல்னா கோட்டத்தின் முக்கிய கல்வி நிலையங்கள்;
சமயங்கள்குல்னா கோட்டத்தில் 88% இசுலாமியர்களும், 11% இந்துக்களும், பிற சமயத்தவர்கள் 1% அளவில் உள்ளனர். மொழிகுல்னா கோட்டத்தில் வங்காளதேசத்தின் அலுவல் மொழியான வங்காள மொழியுடன், உருது, ஆங்கிலம், முண்டா மொழி, மற்றும் தோமாரி மொழிகள் பேசப்படுகிறது. மேற்கோளக்ள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia