டாக்கா கோட்டம்
டாக்கா கோட்டம் (Dhaka Division) (Bengali: ঢাকা বিভাগ, தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் எட்டு நிர்வாகக் கோட்டங்களில் ஒன்றாகும்.[1] வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா நகரமே இக்கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி டாக்கா கோட்டம் 31177.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், மற்றும் 4,74,24,418 மக்கள் தொகையும் கொண்டது. டாக்கா கோட்டத்தின் வடக்கில் மைமன்சிங் கோட்டமும், தெற்கில் பரிசால் கோட்டமும், தென்கிழக்கில் சிட்டகாங் கோட்டமும், கிழக்கில் சில்ஹெட் கோட்டமும், வடமேற்கில் ரங்க்பூர் கோட்டமும், மேற்கில் ராஜசாகி கோட்டம் மற்றும் குல்னா கோட்டமும் எல்லைகளாக உள்ளது. நிர்வாகம்டாக்கா கோட்டத்தில் இரண்டு மாநகராட்சிகளும், 13 மாவட்டங்களும், 93 துணை மாவட்டங்களும், 1,239 கிராம ஒன்றியக் குழுக்களும் உள்ளது.
மக்கள் தொகையியல்31177.74 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 4,74,24,418 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2,41,72,317 ஆகவும், பெண்கள் 2,32,52,101 ஆகவும் உள்ளனர். ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 1.93 %ஆக உள்ளது. பாலின விகிதம் 104 ஆண்களுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1521 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 54.2% ஆக உள்ளது.[2]இக்கோட்டத்தின் பெரும்பாலான மக்கள் இசுலாமிய சமயத்தைப் பின்பற்றுபவர்களாகவும், வங்காள மொழியைப் பேசுபவர்களாகவும் உள்ளனர். பொருளாதாரம்இக்கோட்டம் வேளாண்மைப் பொருளாதாரத்தைச் சார்ந்து உள்ளது. இக்கோட்டத்தில் பல ஆறுகள் பாய்வதால் நீர் வளமும், மண் வளமும் கொண்டுள்ளது. எனவே இங்கு நெல், கோதுமை, கரும்பு, பருத்தி, சணல், மா, பலா, வாழை, எண்ணெய் வித்துக்கள், நவதானியங்கள், சோளம், உருளைக்கிழங்கு முதலியன பயிரிடப்படுகிறது. போக்குவரத்துஆறுகளின் நீர் வழித் தடங்கள் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு இயந்திரப் படகுகள் மற்றும் பாய்மரப் படகுகள் பயன்படுத்தப்படுகிறது. டாக்கா பன்னாட்டு வானூர்தி நிலையம், உலகத்தின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது. இந்திய இரயில்வேத் துறை, கொல்கத்தா - டாக்கா நகரங்களுக்கிடையே தொடருந்துகள் இயக்குகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia