குழிக்கரை காளிதாஸ் பிள்ளை

குழிக்கரை காளிதாஸ் பிள்ளை (1913 – 10 மார்ச்சு 1973) தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.

பிறப்பும், இசைப் பயிற்சியும்

காளிதாஸ் பிள்ளை திருவாரூருக்கு அருகிலுள்ள குழிக்கரை எனும் ஊரில் 1913 ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர்: பெருமாள் பிள்ளை – கமலாம்பாள். பாட்டனார் அய்யாசுவாமி பிள்ளையிடம் ஆரம்பித்து தொடர்ந்து தந்தையிடமும் நாதசுவர பயிற்சி பெற்றார். திருவாரூர் சுவாமிநாத நாதசுவரக்காரரிடம் இரண்டு ஆண்டுகள் மாணவராக இருந்தார் காளிதாஸ்.

இசை வாழ்க்கை

காளிதாஸ் பிள்ளை தனது பெரியப்பா சேது நாதசுவரக்காரரின் மகனாகிய பிச்சையப்பா பிள்ளையுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார்.

தவில் கலைஞர்கள் உமையாள்புரம் தங்கவேல் பிள்ளை, திருச்செங்காட்டாங்குடி ருத்ராபதி பிள்ளை, திருவாய்மூர் கிருஷ்ண பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, திருபுவனம் சோமுப்பிள்ளை, நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, திருவிழந்தூர் முத்தையா பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேச பிள்ளை, திருவாரூர் வீரப்பாபிள்ளை, திருக்கண்ணமங்கை பத்மநாபன், பெருங்சேரி ராமலிங்கம் ஆகியோர் இவருக்கு தவில் வாசித்துள்ளனர்.

ஆம்பல் ராமச்சந்திரன், குழிக்கரை தட்சிணாமூர்த்தி, திருச்செந்தூர் ராஜாமணி, தூத்துக்குடி கைலாசக் கம்பர், குழிக்கரை கண்ணப்பன், ரத்தினவேல், திருக்கண்ணமங்கை துரை, செம்பியன்மாதேவி குஞ்சிதபாதம், காவாலாக்குடி தட்சிணாமூர்த்தி, நாகூர் பக்கிரிசுவாமி ஆகியோர் காளிதாஸ் பிள்ளையின் மாணவர்கள் ஆவர்.

பெற்ற பட்டங்களும், சிறப்புகளும்

  • இன்னிசை வருணன்
  • நாகசுவர பூபதி

மறைவு

உடல்நலம் சரியில்லாததால் ஒரு காலகட்டத்தில் இவரால் நாதசுவரத்தை வாசிக்க இயலவில்லை. மனவேதனைக்குள்ளான காளிதாஸ், 1973 மார்ச்சு 10 அன்று காலமானார்.

உசாத்துணைகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya