குவாந்தான் ஆறு
குவாந்தான் ஆறு; (மலாய்: Sungai Kuantan; ஆங்கிலம்: Kuantan River) என்பது மலேசியாவின் பகாங் மாநிலத்தின் சுங்கை லெம்பிங் (Sungai Lembing) பகுதியில் இருந்து குவாந்தான் நகரம் (Kuantan City) வழியாக தென் சீனக் கடல் (South China Sea) வரை செல்லும் ஆறு ஆகும்.[1] இந்த ஆறானது, தித்திவாங்சா மலைத்தொடரில் தொடங்கும் ஜெலாய் ஆறு மற்றும் தெம்பெலிங் ஆறு ஆகியவற்றின் சந்தியில் உற்பத்தியாகி தென்சீனக் கடலில் கலக்கும் பகாங் ஆற்றின் (Pahang River) துணை ஆறாகவும் உள்ளது.[2] பொதுகுவாந்தன் ஆற்றின் ஒரு பகுதி, அருகிலுள்ள கடலோரத்தில் உள்ள ஒரு பழங்காலத்துச் சதுப்புநிலக் காடுகளைக் கடந்து செல்கிறது. இந்தச் சதுப்புநிலக் காடுகள், 500 ஆண்டுகள் பழைமையானவை. அங்கு வாழும் பல விலங்கு மற்றும் பறவை இனங்களுக்கு (Animal and Bird Species) இந்தக் காடுகள் மிகவும் மதிப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன. மேலும் இந்த நதி அப்பகுதியின் சுற்றுச் சூழலியலை ஆதரிக்கிறது. இந்தச் சதுப்பு நிலம் 340 எக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது.[3] பகாங் ஆற்றின் வழித்தடங்கள்தித்திவாங்சா மலைத்தொடரின் (Titiwangsa Mountains) மேல் சரிவுகளில் உள்ள கேமரன் மலையில் இருந்து ஜெலாய் ஆறு (Jelai River), தென்கிழக்கு திசையை நோக்கிப் பாய்கிறது. பகாங் ஆறு, தெம்பிலிங் ஆற்றில் (Tembeling River) சேர்வதற்கு முன்பாக கோலா லிப்பிஸ் வழியாகப் பாய்கிறது.[4] தெம்பிலிங் ஆறு, பகாங் மற்றும் திராங்கானு மாநிலங்களின் எல்லையில் உள்ள உலு தெம்பிலிங்கில் தொடங்கி தென்கிழக்கு திசையில் நகர்ந்து கோலா தாகான் வழியாகக் கடந்து செல்கிறது. பகாங் ஆறு, தெற்கு திசையில் கடந்து ஜெராண்டுட், கோலா குராவ், கெர்டாவ் (Kerdau) மற்றும் தெமர்லோ ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறது. மெங்காராக் (Mengkarak) எனும் இடத்தில், வடகிழக்கு நோக்கி திரும்பி செனோர் (Chenor) வழியாகப் பாய்ந்து பின்னர் லுபோக் பாக்கு (Lubuk Paku) மற்றும் லெபார் என்ற இடத்தில் கிழக்கு திசை நோக்கி திரும்புகிறது. தென்சீனக் கடலில் கலக்கும் பகாங் ஆறுஅதன் பின் வெள்ளப் பெருக்குச் சமவெளியான பாலோன் இனாய் (Paloh Hinai), பெக்கான் மாவட்டம் மற்றும் கோலா பகாங் ஆகிய நிலப்பரப்புகளைக் கடந்து தென்சீனக் கடலில் கலக்கிறது.[5] இந்தப் பகாங் ஆறு உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கேமரன் மலை, லிப்பிஸ், ஜெராண்டுட், தெமர்லோ, பெரா, மாரான் மற்றும் பெக்கான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகாங் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் கடந்து செல்கிறது. காட்சியகம்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
மேலும் காண்க |
Portal di Ensiklopedia Dunia