எண்டாவ் ஆறு
எண்டாவ் ஆறு; (மலாய்: Sungai Endau; ஆங்கிலம்: Endau River) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தின் எண்டாவ்-ரொம்பின் தேசியப் பூங்காவில் (Endau Rompin National Park) உருவாகி தென் சீனக் கடலில் (South China Sea) சங்கமிக்கும் ஆறு ஆகும்.[2] இந்த ஆறு ஜொகூர் மாநிலத்தில் உருவாகினாலும், தென் சீனக் கடலில் கலக்கும் போது; பகாங் - ஜொகூர் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இயற்கை எல்லையாக அமைகிறது. அந்த வகையில் எண்டாவ் ஆறு, புவியல் ரீதியாக பகாங் மாநிலத்தின் ஓர் ஆறாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இந்த ஆற்றின் 90 விழுக்காடு பயன்பாடு ஜொகூர் மாநிலத்திலேயே அதிகமாக உள்ளது. பொதுஇந்த ஆறு தென் சீனக் கடலில் சேர்வதற்கு முன்னர் ஜொகூர் மாநிலத்தின் எண்டாவ் (Endau), மெர்சிங் மாவட்டம் (Mersing District); பகாங் மாநிலத்தின் கோலா ரொம்பின் (Kuala Rompin), ரொம்பின் மாவட்டம் (Rompin District) ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறது.[3] எண்டாவ் நகரம் எண்டாவ் ஆற்றின் முகப்பில் அமைந்துள்ளது. மீன்பிடி படகுகள்; மீன்பிடி கப்பல்கள் போன்ற படகு போக்குவரத்து துறை சார்ந்த தளவாடங்களை எண்டாவ் துறைமுகத்திலும்; எண்டாவ் பாலத்திற்கு அருகிலும் நிறுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம். பொதுவாக எண்டாவ் நகரம் ஒரு மீன்பிடி நகர கிராமமாகவே அறியப்படுகிறது. காட்சியகம்மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia