கூர்க்காலாந்து பிரதேச நிர்வாகம்
![]() கோர்க்காலாந்து பிரதேச நிர்வாகம் (Gorkhaland Territorial Administration) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில், மலைப்பிரதேசங்களில், கூர்க்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டங்கள் தன்னாட்சி மாவட்டங்களாக 14 மார்ச் 2012 முதல் செயல்படுகிறது. முன்னர் இது 1988 ஆண்டு முதல் டார்ஜீலிங் கோர்க்கா தன்னாட்சி மலைக் குழு என்ற பெயரில் இயங்கி வந்தது.[1] கோர்க்காலாந்து தன்னாட்சிப் பிரதேச நிர்வாகத்தில் டார்ஜிலிங் மாவட்டத்தின் டார்ஜிலிங் வட்டம், குர்சியோங் வட்டம், மிரிக் வட்டம் மற்றும் சிலிகுரி வட்டத்தின் சில பகுதிகளும், காளிம்பொங் மாவட்டம் முழுவதும் உள்ளது.[2] வரலாறுஇந்தியாவில் நேபாளி மொழி பேசும் கூர்க்கா இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கில் உள்ள டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் காளிம்பொங் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு கோர்க்காலாந்து என தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கோர்க்காலாந்து விடுதலை முன்னணி எனும் இயக்கத்த்தினர் 1980 ஆண்டு முதல் போராடினர்.[3] இதனால் 1988-இல் மேற்கு வங்க அரசு டார்ஜிலிங் கோர்க்கா மலைக் குழுவை நிறுவியது.[4] பின்னர் 2007-இல் பிமல் குரூங் தலைமையில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா எனும் கூர்க்கர்களின் புதிய அரசியல் தனி கோர்க்காலாந்து மாநிலததை நிறுவ வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது.[5] கோர்க்காலாந்து தன்னாட்சி பிரதேசம் நிறுவுதல்கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியின் மூன்றாண்டு போராட்டங்களுக்குப் பின்னர், பாதி அளவு தன்னாட்சி கொண்ட டார்ஜிலிங் மலைப் பிரதேச அரசு நிறுவ உடன்படிக்கை ஏற்பட்டது.[6] இதற்காக மேற்கு வங்க அரசு 2 செப்டம்பர் 2011 அன்று சட்டமன்றத்தில் சட்டமுன் வடிவை நிறைவேற்றியது.[7] நிர்வாகம் மற்றும் நிதி அதிகாரம் தவிர்த்த பிற சட்டம் இயற்றும் அதிகாரம் அற்ற கோர்க்காலாந்து தன்னாட்சிப் பிரதேசத்தை நிறுவ, மாநில உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட வழிகாட்டு குழுவை அரசு நியமித்தது.[8] புரிந்துணர்வு ஒப்பந்தம்கோர்க்காலாந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்,[9]இந்திய அரசு அமைச்சர் ப. சிதம்பரம் முன்னணிலையில், சிலிகுரியில் 18 சூலை 2011-ஆம் ஆண்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கோர்க்காலாந்து முக்தி மோர்ச்சா அரசியல் கட்சியின் தலைவர்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.[10][11] இந்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 14 மார்ச் 2012 அன்று கோர்க்காலாந்து தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்டது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia