கேசவன் வேலுதாட்
கேசவன் வேலுதாட் (பிறப்பு 1951) ஓர் இந்திய வரலாற்றாசிரியரும் மற்றும் இடைக்கால தென்னிந்திய வரலாற்றில் புலமை பெற்ற கேரளாவைச் சேர்ந்த கல்வியாளரும் ஆவார். [1] இவர் ஒரு தேர்ந்த கல்வெட்டு ஆய்வாளரும் ஆவார். சமஸ்கிருதம், தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளை அறிந்தவர் ஆவார். [2] [3] கல்விவேலுதாட் 1974 ஆம் ஆண்டு, கேரளாவில், தேசிய கிராமப்புற உயர்கல்வி கழகத்தில், (ஆங்கிலம்: National Council for Rural Higher Education), இளங்கலைப் பட்டம் பெற்றார். கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தில் (ஆங்கிலம்: University of Calicut) முதுகலைப் பட்டம் பெற்றார். [3] 1978 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் M. Phil பட்டமும், 1987 ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இவர் வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ் நாராயணனின் மாணவர். [4] வரலாற்று பேராசிரியர் பணிவேலுதாட் 1975 ஆம் ஆண்டில், கல்லூரி ஆசிரியராக கேரள அரசுப் பணியில் அமர்ந்தார். 1982 ஆம் ஆண்டில் புதிதாக உருவான மங்களூர் பல்கலைக்கழகத்திற்கு மாறிச் சென்றார். வேலுதாட் 2008 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றார். [3] தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகவும் பின்னர் பணியாற்றினார். [3] வருகைதரு பேராசிரியர்அவர் எகோல் பிராட்டிக் டெஸ் ஹாட்ஸ் எட்யூட்ஸில் , பாரிஸ் (பிரெஞ்சு: Ecole Pratique des Hautes Etudes) மனித அறிவியல் பேரவை, பாரிஸ், (பிரெஞ்சு: Maison des Sciences de l’Homme, Paris; ஆங்கிலம்: House of Human Sciences, Paris) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புது தில்லி; மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், கேரளா மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம், ஹைதராபாத் ஆகிய பல்கலைக்கழகங்களில் வருகை தரும் பேராசிரியராக இருந்தார். இவர் இந்திய வரலாற்று காங்கிரஸின் (ஆங்கிலம்: Indian History of Congress) வாழ்நாள் உறுப்பினர்ஆவார். [3] இவர் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை மதிப்பிடுவதில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலுடன் (NAAC) தொடர்புடையவர் ஆவார். [3] முக்கிய வெளியீடுகள் (ஆங்கில நூல்கள்)
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia