கேளடி நாயக்கர்கள்
![]() கேளடி அல்லது கெளதி நாயக்கர்கள், (ஆட்சி காலம்: 1499–1763) இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், சிமோகா மாவட்டத்தில், கெளதி எனும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு சிவப்பா நாயக்கரால் 1499இல் நிறுவப்பட்ட அரசாகும். கெளதி நாயக்கர்கள் துவக்க காலத்தில், விசயநகரப் பேரரசின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். விசயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் கி பி 1565இல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மலைநாடு, கர்நாடக கடற்கரை பகுதி, கேரளாவின் மலபார் பகுதி, துங்கபத்திரை ஆற்றுச் சமவெளி பகுதிகளை சுதந்தரமாக ஆண்டனர்[1] கி பி 1763இல் ஹைதர் அலியால் வெற்றி கொள்ளப்பட்டு, கெளதி நாயக்கர்கள் ஆண்ட பகுதிகள் மைசூர் அரசுடன் இணைக்கப்பட்டது.[2] பெயர்க் காரணம்கன்னடம் மொழி பேசும், சிவ பெருமானை மட்டும் வழிபடும் லிங்காயத்துகளான கெளதி, படைவீரர்கள், விசயநகரப் பேரரசுக்கு விசுவாசமாக பல போர்க்களங்களில் போரிட்டதால், கெளதி படைத்தலைவர் சௌடப்பாவிற்கு , விசயநகரப் பேரரசு, நாயக்கர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது. அது முதல் கெளதி ஆட்சியாளர்கள் நாயக்கர் பட்டம் இட்டுக் கொண்டனர். வரலாறுசௌடப்ப நாயக்கர் 1499–1530சௌடப்ப நாயக்கார், கெளதி நாயக்கர் மரபை நிறுவிய முதல் மன்னராவார். இவர் கெளதி யை தலைநகராகக் கொண்டு சிமோகா மாவட்டத்தின் பல பகுதிகளை வென்று, விசயநகரப் பேரரசிற்கு உட்பட்ட குறுநில மன்னராகவும், விசயநகரப் பேரரசின் ஒரு படைத்தலைவராகவும் விளங்கினார். சதாசிவ நாயக்கர் 1530–1566சதாசிவ நாயக்கர்[3] கல்யாணிப் போரில் வீரதீரச் செயல் புரிந்தமைக்கு, விசயநகரப் பேரரசர் ராமராயரிடமிருந்து, கோட்டை காப்பவர் (Kotekolahala) எனும் விருதை பெற்றவர். கர்நாடகாவின் கடற்கரை பகுதிகளை, கெளதி நாட்டின் ஆட்சியில் கொண்டு வந்தார். தலைநகரை கெளதியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லிக்கேரிக்கு மாற்றினார். இவருக்குப் பின் சங்கன்ன நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சி காலம்: 1566–1570 சிக்க சங்கன்ன நாயக்கர் 1570–1580தக்காண சுல்தான்களிடம், விசயநகரப் பேரரசு தலிகோட்டா சண்டையில் தோற்றவுடன், சிக்க சங்கன்ன நாயக்கர், உத்தர கன்னட மாவட்டப் பகுதிகளை கைப்பற்றி தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டார். இவருக்கு பின்னர் ராமராஜா நாயக்கர் 1580 முதல் 1586 முடிய ஆண்டார். வெங்கடப்ப நாயக்கர் 1586–1629பெனுகொண்டாவின் விசயநகர ஆட்சியாளர்களிடமிருந்து தம்நாட்டை விடுவித்துக் கொண்டு தனி சுதந்திர நாடாக மாற்றியவர். மலைநாட்டை கைப்பற்றி, 1618-1619களில் போர்த்துகீசியர்களை வெற்றி கொண்டவர்.[4] வீரபத்திர நாயக்கர் 1629–1645வீரபத்திர நாயக்கர் காலத்தில் நடந்த தக்கான சுல்தான்களின் படையெடுப்புகளால் தலைநகரம் லிக்கரி பல இன்னல் கண்டது. சிவாப்பா நாயக்கர் 1645–1660கெளதி நாயக்கர்களில் தனிப் பெரும் ஆட்சியாளராக கருதப்பட்டவர். தக்கான பிஜப்பூர் சுல்தான்கள், மைசூர் ஆட்சியாளர்கள், போர்த்துகீசியர்களை[5] வென்று கர்நாடகத்தின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்த பெருமைக்கு உரியவர். மற்ற ஆட்சியாளர்கள்
போரில் ஹைதர் அலியால் பிடிக்கப்பட்ட ராணி வீரம்மாஜியை 1767இல் மராத்தியப் பேரரசால் விடுவிக்கப்பட்டு, மராத்திய அரசின் தலைநகர் புனேவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டார்.[6] கெளதி நாயக்கர் ஆட்சியின் வீழ்ச்சியும் முடிவும்பலமிலந்த கெளதி அரசை, இறுதியாக மைசூர் அரசின் ஹைதர் அலி கைப்பற்றி மைசூருடன் இணைத்துக் கொண்டதால், கெளதி நாயக்கர் ஆட்சி கி பி 1763இல் முடிவடைந்தது. காட்சியகம்
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia