கே. இலட்சுமிநாராயணன்
கே. இலட்சுமிநாராயணன் (K. Lakshminarayanan) என்பவர் அகில இந்திய என். ஆர். காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். 2016 இல் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் ராஜ் பவன் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நமச்சிவாயம் தனது சட்டமன்ற உறுப்பினர் விலகல் கடிதத்தை சட்டமன்ற அவைத்தலைவரிடம் சமர்ப்பித்து, 2021 இல் புதுச்சேரியின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முந்தைய நாள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். [1] [2] [3] 2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து ரங்கசாமியின் நான்காவது அமைச்சரவையில் பொதுப்பணி, சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், சட்டம், தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை. துறை அமைச்சராக பொறுப்பேற்றார். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia