கே. ஜி. சுப்ரமணியன்
கல்பாத்தி கணபதி கே. ஜி. சுப்பிரமண்யன் (Kalpathi Ganpathi K.G. Subramanyan) (1924 – 29 ஜூன் 2016) ஒரு இந்திய கலைஞராவார். இவருக்கு 2012இல் பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது .[4] வாழ்க்கைசுப்ரமண்யன் 1924இல் இந்தியாவின் கேரளாவில் கூத்துபறம்பு [5][6] என்ற கிராமத்தில் பிறந்தார்.[7] ஆரம்பத்தில் சென்னை, மாநிலக் கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார்.[7] சுதந்திர போராட்டத்தில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் இவர் காந்திய சித்தாந்தத்திற்கு பெயர் பெற்றவர். இவர் சிறையில் அடைக்கப்பட்டக் காரணத்தால் பிரித்தானிய ஆட்சியின் போது அரசு கல்லூரிகளில் சேர தடை விதிக்கப்பட்டார். 1944ஆம் ஆண்டில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் கலை பீடமான கலா பவனில் கல்வி கற்க சாந்திநிகேதனுக்கு சென்றபோது ஒரு கலைஞராக இவரது வாழ்க்கையின் திருப்புமுனை வந்தது. நவீன இந்திய கலையின் முன்னோடிகளான நந்தலால் போஸ், பெனோட் பிஹாரி முகர்ஜி மற்றும் இராம்கிங்கர் பைஜ் ஆகியோரின் கீழ், சுப்பிரமணியன் 1948 வரை அங்கு படித்தார். 1951 இல் பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பலகலைகழகத்தின் நுண்கலை பீடத்தில் விரிவுரையாளரானார். 1956 இல் பிரித்தானிய அமைப்பின் அறிஞராக இலண்டனில் ஸ்லேட் கலைப்பள்ளியில் சிலகாலம் படிக்கச் சென்றார். ஓவியப் பேராசிரியராக பணியாற்ற பரோடாவுக்குச் சென்றார். 1966ஆம் ஆண்டில் நியூயார்க்கில் ராக்ஃபெல்லர் கூட்டாளராக சிலகாலம் பணியாற்றினார்.[8] 1980 ஆம் ஆண்டில், விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் தான் படித்த பள்ளியான கலா பவனில் கற்பிப்பதற்காக மீண்டும் சாந்திநிகேதனுக்குச் சென்றார். ஓவியப்பேராசிரியராக பணியாற்றி 1989 இல் ஓய்வு பெற்றார். சுப்ரமண்யன் தனது மகள் உமாவுடன் பரோடாவில் தனது வாழ்க்கையின் பிற்பகுதிகளில் வசித்து வந்தார். இவர் 29 ஜூன் 2016 அன்று இறந்தார்.[2] கலை பாணிகள் மற்றும் தாக்கங்கள்சுப்பிரமண்யன் கேரளாவைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைகள், கோழிக்கோட்டு ஓவியம், வங்காளம் மற்றும் ஒடிசாவிலிருந்து பட்டசித்ரம், அத்துடன் இந்திய அரசவை ஓவியங்கள் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். நினைவு நிகழ்ச்சிகே. ஜி. சுப்பிரமண்யனின் ஏராளமான நினைவு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஆர். சிவக்குமார் அவர்களால் புது தில்லி நவீன கலைக்கூடத்தில் நடத்தப்பட்ட "கே.ஜி. சுப்பிரமண்யன், ஒரு நினைவு" என்ற நிகழ்ச்சி நான்காவதும் பெரியதும் ஆகும் .[9] கௌரவங்களும் விருதுகளும்![]()
மாணவர்கள்இவரது மாணவர்களில், பூபன் காகர், குலாம் ரசூல் சந்தோஷ், குலாம் முகமது சேக், ஹாகு ஷா, ஜெயந்த் பாரிக், ஜோதி பட், ஜோத்ஸ்னா பட், லக்ஷ்மா கவுட், மிருணாளினி முகர்ஜி, நீலிமா ஷேக், ராஜீவ் லோகன், ரத்தன் பரிமூ, ரேகா ரோத்விட்டியா, சாந்தி தவே, தோட்டா வைகுந்தம், விவன் சுந்தரம் ஆகியோர் இருந்தனர். குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia