கொட்டாச்சி

கொட்டாச்சி
பிறப்புகொட்டாசி அன்னமகன்[1]
பணி
செயற்பாட்டுக்
காலம்
2000 - முதல்
வாழ்க்கைத்
துணை
அஞ்சலி
பிள்ளைகள்மானசுவி

கொட்டாச்சி (Kottachi) தமிழ்த் திரைப்படங்களில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகரும், இயக்குநரும் ஆவார்.[2][3] இவர் கழுமரம் (2024) என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.[4]

தொழில் வாழ்க்கை

கொட்டச்சியும் அவரது தாயும் சீமான் (1994) படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதன் பிறகு நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பைத் தேடினார்.[5] இயக்குனர் எழில் தனது பெண்ணின் மனதைத் தொட்டு (2000) படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.[6] பின்னர், கிச்சா வயசு 16 (2005) படத்தில் நடித்தார்.[7] சந்தமாமா (2013) படத்தில் முழு நீள நகைச்சுவை வேடத்திலும், கடவுளுக்கு நன்றி (2016) படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்தார்.[6]

எம். எஸ். பாஸ்கரின் பின்னணிக் குரலுடன் வெளியான விழுது (2021) மற்றும் வறன்ட விழிகள் (2020) ஆகிய குறும்படங்களை இவர் இயக்கினார். இரண்டு குறும்படங்களும் இவரது சேனல் மான் வலை என்ற யூடியூப் மூலம் நேரடியாக வெளியிடப்பட்டன.[8][9] 2024 ஆம் ஆண்டில், கழுமரம் என்ற திரைப்படத்தை இயக்கி, அதில் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.[10]

சொந்த வாழ்க்கை

கொட்டாச்சி தனது மூத்த சகோதரியின் மகள் அஞ்சலி என்பவரை மணந்தார்.[6] இவர்களின் மகள் மானஸ்வி ஒரு குழந்தைக் கலைஞர் ஆவார்.[11][12]

மேற்கோள்கள்

  1. "கழுமரம்" [Kazhumaram]. மாலை மலர். 19 February 2024. Archived from the original on 27 March 2024. Retrieved 27 March 2024.
  2. "Vivek's last audio message to actor Kottachi is emotional and shows his generous side". பிங்க்வில்லா. Archived from the original on 22 April 2021.
  3. "கொட்டாச்சிக்கு கடைசியாக போன் செய்த விவேக்: ஆடியோவை கேட்டு ரசிகர்கள் கண்ணீர்" [Vivek's last phone call to Kottachi: Fans tear up after hearing the audio]. Samayam Tamil. Archived from the original on 2023-02-11. Retrieved 2023-02-11.
  4. "படம் இயக்கும் கிராமத்து இளைஞன்.. தடுக்க சதி செய்யும் தயாரிப்பாளர்! - "கழுமரம்" திரைவிமர்சனம்" [The village boy who is directing the film.. The producer is plotting to stop him! - Kazhumaram film review]. tamil.webdunia.com. Archived from the original on 2024-06-04. Retrieved 2024-06-04.
  5. வைதேகி, ஆர். (5 June 2024). ""ஆசைப்பட்ட வாய்ப்புகள், அங்கீகாரம்… எல்லாமே மானுவாலதான் சாத்தியமாச்சு!" - மகளதிகாரம் - 4" [“The coveted opportunities, recognition… all manually made possible!” - Empowerment of women - 4]. ஆனந்த விகடன். Archived from the original on 20 May 2024.
  6. 6.0 6.1 6.2 வைதேகி, ஆர். (5 June 2024). ""ஆசைப்பட்ட வாய்ப்புகள், அங்கீகாரம்… எல்லாமே மானுவாலதான் சாத்தியமாச்சு!" - மகளதிகாரம் - 4" [“The coveted opportunities, recognition… all manually made possible!” - Empowerment of women - 4]. ஆனந்த விகடன். Archived from the original on 20 May 2024.வைதேகி, ஆர்.
  7. "Kicha Vayasu 16 tamil Movie - Overview". www.moviecrow.com. Archived from the original on 2023-02-11. Retrieved 2023-02-11.
  8. Rajendran, Gopinath (10 August 2020). "Comedian Kottachi turns director". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 11 February 2023. Retrieved 11 February 2023.
  9. "Kottachi's short film Vizhudhu wins critical acclaim". DT Next. 8 June 2021. Archived from the original on 4 June 2024. Retrieved 4 June 2024.
  10. "படம் இயக்கும் கிராமத்து இளைஞன்.. தடுக்க சதி செய்யும் தயாரிப்பாளர்! - "கழுமரம்" திரைவிமர்சனம்" [The village boy who is directing the film.. The producer is plotting to stop him! - Kazhumaram film review]. tamil.webdunia.com. Archived from the original on 2024-06-04. Retrieved 2024-06-04."படம் இயக்கும் கிராமத்து இளைஞன்.. தடுக்க சதி செய்யும் தயாரிப்பாளர்! - "கழுமரம்" திரைவிமர்சனம்" [The village boy who is directing the film.. The producer is plotting to stop him! - Kazhumaram film review].
  11. "நயன்தாரா மகளாக நடித்த சுட்டி குழந்தை இந்த காமெடி நடிகரின் மகளாம்!" [The small child who played Nayantara's daughter is the daughter of this comedy actor!]. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 8 September 2018. Archived from the original on 13 July 2020. Retrieved 13 July 2020.
  12. சர்பனா, வினி (6 April 2024). ""லோன்லதான் மகளுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன்! ஆனாலும்..." - நடிகர் கொட்டாச்சி பேட்டி" ["I bought a car for my daughter on a loan! But..." - Actor Kottachi interview]. ஆனந்த விகடன். Archived from the original on 4 June 2024. Retrieved 29 June 2024.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya