மானஸ்வி கொட்டாச்சி
மானஸ்வி கொட்டாச்சி (Manasvi Kottachi) தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் குழந்தை நட்சத்திரமாவார். சொந்த வாழ்க்கைமானஸ்வி, வடிவேலு, விவேக் ஆகியோருடன் துணை நகைச்சுவை வேடங்களில் தோன்றிய நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகளாவார்.[1][2] இவரது தந்தையின் முகநூல் கணக்கில் மானஸ்வியின் காணொளியைக் கண்ட இவரது தந்தையின் மேலாளர் இவரை இமைக்கா நொடிகள் (2018) திரைப்படத்தில் அறிமுகம் செய்தார்.[3] இந்தப் படத்தில், மானஸ்வி நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். மேலும் தனது பாத்திரத்திற்காக வரவேற்பும் பெற்றார்.[4][5] பின்னர், நடிகர் திலீப்புடன் மை சாண்டா (2019) என்ற மலையாளப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.[1][2][6] தர்பார் (2020) உட்பட பல படங்களில் நடித்தார்.[4] [7] ஸ்ரீ மணி இயக்கிய கண்மணி பாப்பா (2022) என்ற திகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.[8] [9] மாமனிதன்(2022) படத்தில் நடித்ததைத் தொடர்ந்து, பாலிவுட் படத்தில் பணிபுரியவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[10] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia