கொன்னப்ப பாகவதர்
கொன்னப்ப பாகவதர் அல்லது ஹொன்னப்ப பாகவதர் (கன்னடம்: ಹೊನ್ನಪ್ಪ ಭಾಗವತರು, 1915 -1992), கர்நாடகம் மாநிலத்தில், பெங்களூருக்கு அருகே உள்ள (நெலமங்கலா), சௌட சந்திரா கிராமத்தில் பிறந்த கருநாடக இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். நல்ல உடல் வளமும் குரல் வளமும் கொண்ட தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர், சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், இயக்குநர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[1][2] 1930ஆம் ஆண்டில் "குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடகக் குழு"வில் சேர்ந்து சரித்திர, சமூக நாடகங்களில் முக்கிய பாத்திரங்களில் பாடி நடித்தார். 1937-ஆம் ஆண்டில் தமிழ்நாடு, சேலத்தில் இருந்த சேலம் சங்கீத ரசிகர்கள் சபா இவருக்கு பாகவதர் பட்டத்தை வழங்கியது. தியாகராஜ பாகவதருடன் தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராகவும், கதாநாயகராகவும் நடித்துள்ளார். பண்டரி பாய் மற்றும் சரோஜா தேவியை முதலில் கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம் செய்த இவர், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை உருவாக்கியுள்ளார். 1960ஆம் ஆண்டில் உமா மகேஸ்வரா நாடகக்குழுவைத் துவக்கி பல கன்னட மொழி நாடகங்களை நடத்தினார்.[3] நடித்த திரைப்படங்கள்ஹொன்னப்ப பாகவதர் நடித்த சில திரைப்படங்கள்.[4][5] தமிழ்த் திரைப்படங்கள்
கன்னட மொழி திரைப்படங்கள்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia