ஸ்ரீ முருகன் (திரைப்படம்)
ஸ்ரீ முருகன் (Sri Murugan) என்பது 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எம் சோமசுந்தரம் தயாரிப்பில், வி. எஸ். நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர் நாயகனாக நடித்தார். இப்படத்தில் எம். ஜி. ஆர் கே. மாலதியுடன் இணைந்து சிவ தாண்டவம் ஆடினார்.[2] நடிப்புஇப்பட்டியலில் உள்ள பெயர்கள் தி இந்துவின் கட்டுரையில் இருந்து எடுக்கபட்டன.[2]
படக்குழுபிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத்தளத்திலிருந்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டது.[1]
தயாரிப்பு![]() இப்படத்தில் முதலில் எம். கே. தியாகராஜ பாகவதர் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் பாகவதரைக் கொண்டு சில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சந்தேக நபராக அவர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். அதனால் அவருக்குப் பதிலாக பெங்களூரைச் சேர்ந்த கொன்னப்ப பாகவதர் நாயகனாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். ஆவரை வைத்து இயக்க விரும்பாத ராஜா சந்திரசேகர் படத்திலிருந்து வெளியேறினார்.[4] இதனால் தயாரிப்பாளர் எம். சோமசுந்தரமும் வி. எஸ். நாராயணனுடன் (பானுமதியின் சகோதரியின் கணவர்) இணைந்து படத்தை இயக்கினார். இதில் சிவன் வேடத்தில் எம். ஜி. ஆர் நடித்தார். தெலுங்கு நடிகை கே. மாலதியுடன் இணைந்து சிவ தாண்டவம் நடனம் ஆடினார். இந்த நடனம் படத்தின் சிறப்பம்சமாக இருந்தது. கடுமையான பயிற்சிக்குப் பிறகு எம்.ஜி.ஆர் சிறப்பாக ஆடினார். அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது, இது ஜூபிடரின் அடுத்த படமான ராஜகுமாரியில் அவர் நாயகனாக நடிக்க வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.[1] பாடல்கள்இப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு, எஸ். வி. வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். பாடல் வரிகளை பாபநாசம் சிவன் எழுதியுள்ளார்.[1] யூ. ஆர். ஜீவரத்தினம் என்ற நடிகை, ஆண் வேடத்தில் நாரதராக நடித்து, பல பாடல்களைப் பாடினார். கென்னப்ப பாகவதருக்கும் பாடல்கள் இருந்தன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia