கொயிலாண்டி வட்டம்கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கொயிலாண்டி வட்டம் அமைந்துள்ளது. கொயிலாண்டி நகராட்சியையும், அதைச் சுற்றியுள்ள 35 வருவாய் ஊராட்சிகளையும் சேர்த்து கொயிலாண்டி வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வட்டம் 756.9 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வட்டத்தின் தலைமையகம் கொயிலாண்டியில் உள்ளது.[1] இந்த வட்டத்தில் கொயிலாண்டி மட்டும் நகராட்சி என்னும் நிலையைப் பெற்றுள்ளது. ஆட்சிப் பிரிவுகள்தொகுதிகள்இந்த வட்டத்தில் உள்ள சில பகுதிகள் கோழிக்கோடு மக்களவைத் தொகுதியிலும், மற்றவை [[வடகரை மக்களவைத் தொகுதி[]]யிலும் உள்ளன. [2] கேரள சட்டமன்றத்திற்கான பேராம்பிரா, கொயிலாண்டி, பாலுசேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இவ்வட்டத்தில் உள்ள ஊர்களைக் கொண்டவை. [3] மண்டலங்கள்இந்த வட்டத்தை பாலுசேரி மண்டலம், பந்தலாயனி மண்டலம், மேலடி மண்டலம், பேராம்பிரை மண்டலம் எனப் பிரித்துள்ளனர். [4] ஊராட்சிகள்கீழரியூர், மேப்பய்யூர், பய்யோளி, திக்கோடி, துறவூர், சக்கிட்டபாறை, சங்கரோத்து, செறுவண்ணூர், காயண்ணை, கூத்தாளி, நொச்சாடு, பேராம்பிரை, அத்தோளி, பாலுசேரி, கூராச்சுண்டு, கோட்டூர், நடுவண்ணூர், பனங்காடு, உள்ளியேரி, உண்ணிகுளம், அரிக்குளம், சேமஞ்சேரி, செங்கோட்டுகாவு, மூடாடி ஆகிய 24 ஊராட்சிகள் உள்ளன. [5] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia