கொலோரியாங்

கொலோரியாங்
கொலோரியாங் is located in அருணாசலப் பிரதேசம்
கொலோரியாங்
கொலோரியாங் is located in இந்தியா
கொலோரியாங்
ஆள்கூறுகள்: 27°55′N 93°21′E / 27.917°N 93.350°E / 27.917; 93.350
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்குருங் குமே மாவட்டம்
ஏற்றம்
1,040 m (3,410 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,345

கொலோரியாங் (Koloriang), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள குருங் குமே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 1040 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலைகளால் சூழ்ந்த இந்நகரம் இந்தியா-திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.[1][2]இது சுபன்சிரி ஆற்றின் துணை ஆறான குரூங் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடமேற்கில் 231.3 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 13 இந்நகரம் வழியாகச் செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 463 குடும்பங்கள் கொண்ட கொலோரியாங் பேரூராட்சியின் மக்கள் தொகை 2,345 ஆகும். சராசரி எழுத்தறிவு 69.45 % ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 89.81 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 10.15%, இசுலாமியர் 2.30% பௌத்தர்கள் 0.34%, கிறித்தவர்கள் 53.65% மற்றும் பிற சமயத்தினர் 33.86% வீதம் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

  1. Arunachal Pradesh District Gazetteers: Tirap District, Government of Arunachal Pradesh, 1981
  2. Toni Huber, Stuart Blackburn (2012). Origins and Migrations in the Extended Eastern Himalayas. Brill Publishers. p. 73. ISBN 978-9004226913. Retrieved 30 July 2015.
  3. Koloriang Town Population Census 2011
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya