கோபி சந்த் பார்கவா
கோபி சந்த் பார்கவா (Gopi Chand Bhargava) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1889 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] பஞ்சாபின் முதல் முதலமைச்சராக 15 ஆகத்து 1947 முதல் 13 ஏப்ரல் 1949 வரையிலும், மீண்டும் 18 அக்டோபர் 1949 முதல் 20 சூன் 1951 ஆம் ஆண்டு வரையிலும், 1964 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் தேதி முதல் மூன்றாவது முறையாகப் பொறுப்பாளராகவும் இருந்தார். [3] [4] இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார். [5] [3] 1966 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று கோபி சந்த் பார்கவா இறந்தார். தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை![]() அவர் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சிர்சா மாவட்டத்தில் 8 மார்ச் 1889 அன்று பிறந்தார். 1912 ஆம் ஆண்டில், மருத்துவக் கல்லூரியில் (லாகூர்) தனது மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார், பின்னர் [6] மருத்துவராகப் பணிபுரியத் தொடங்கினார். இவரது சகோதரர், பண்டிட் தாக்கூர் தாசு பார்கவாவும், ஓர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியாவார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், "வித்யா பிரச்சாரினி சபா" நிறுவனர் மற்றும் தாக்கூர் தாசு பார்கவா முதுநிலை மாதிரி பள்ளி மற்றும் இசாரிலுள்ள பெண்களுக்கான பதே சந்த் கல்லூரி உட்பட பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நிறுவனராவார். [7] [8] [9] மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia