கோமதி ஆறு
கோமதி ஆறு (Gomati River) (Hindi: गोमती Gomtī) கங்கை ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இந்து தொன்மவியல் படி கோமதி ஆறு வசிட்டரின் மகளாக கருதப்படுகிறது. ஏகாதசி அன்று இவ்வாற்றில் குளிப்பதால் பாவங்கள் நீங்கும் என்பது இந்துக்களின் சமய நம்பிக்கையாகும்.[1] பாகவத புராணத்தின் படி கோமதி ஆறு பரத கண்டத்தின் புனித ஆறுகளில் ஒன்றாக கூறப்பட்டுள்ளது..[2]இவ்வாற்றில் வைணவர்கள் போற்றும் சுதர்சன சக்கர வடிவத்தில் கற்கள் கிடைக்கிறது.[3] நிலவியல்கோமதி ஆறு, வடமேற்கு உத்தரப் பிரதேசத்தின் ரோகில்கண்ட் பிராந்தியத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் உள்ள புல்கர்ஜீல் எனுமிடத்தில் உள்ள கோமதி ஏரியிலிருந்து உற்பத்தி ஆகிறது. கோமதி ஆறு உத்தரப்பிரதேசத்தின் லக்னோ, லக்கிம்பூர், சுல்தான்பூர், ஜௌன்பூர் வழியாக 900 கிலோ மீட்டர் பாய்ந்து, இறுதியில் வாரணாசி மாவட்டத்தின் செய்யதுபூர் எனுமிடத்தில் கங்கை ஆற்றில் கலக்கிறது. நகரங்கள்![]() கோமதி ஆற்றாங்கரையில் லக்னோ, லக்கிம்பூர், சுல்தான்பூர், ஜௌன்பூர் போன்ற 15 நகரங்கள் உள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia