வசிட்டர்![]() வசிட்டர் (वसिष्ठ, வசிஷ்டர்) பிரம்ம ரிஷி ஏழு புகழ்பெற்ற சப்தரிசிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் இருக்கு வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33-இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர். இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita). இவரின் மனையாளின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் பிரம்ம இருடி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.[1] இராமாயண காவியத்தில்இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், தசரதனின் அரச குருவாக விளங்கியவர். விசுவாமித்திரரின் வேண்டுகோளின்படி, இராமன் மற்றும் இலக்குமணனை விசுவாமித்திரருடன் வனத்திற்குச் செல்ல வசிஷ்டர் தசரதனுக்கு ஆலோசனை கூறினார். மகாபார காவியத்தில்மகாபாரத காவியத்தில், வசிட்டரின் மகனாகச் சக்தி மகரிஷி அறியப்படுகிறார்.[2] தன் மகன் சக்தியைக் கொன்ற இச்வாகு குல மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிட்டர் புத்திரபேறு வழங்கியவர்.[3] புராணங்களில்வசிட்டரின் பெயர் அனைத்துப் புராணங்களிலும் அறியப்படுகிறது. மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia