கோலிசோடா 2
கோலிசோடா 2 (Goli Soda 2), என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படமானது விஜய் மில்டன் இயக்கத்திலும் ஒளிப்பதிவிலும், பாரத் சீனி தயாரிப்பில் உருவான தமிழ்த்திரைப்படம் ஆகும். விஜய் மில்டன் இயக்கத்தில் 2015இல் வெளிவந்த கோலிசோடா திரைப்படத்தின் இரண்டாம் பாகமே இத்திரைப்படம். சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆகியோர் துணைப்பாத்திரங்களிலும் ரோகிணி, சுபிக்சா, கிருஷ்ண கருப் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அச்சு ராஜாமணி இசையிலும், தீபக்கின் படத்தொகுப்பிலும் 2018 சூன் 14 அன்று வெளியான தமிழ்த்திரைப்படம் ஆகும். 14 June 2018 நடிப்பு
படப்பணிகள்இயக்குநர் விஜய் மில்டன் முதன் முதலாக தமிழில் ஒலித்துளி இப்படத்திற்காக வெளியிட்டுள்ளார். 2014ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'கோலி சோடா'. கோயம்பேட்டில் இருக்கும் சிறுவர்களில் வாழ்வு குறித்த இப்படம் வெற்றி பெற்றதால் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பகுதியை இயக்கி வருகிறார் விஜய் மில்டன். இந்தப் படத்தின் முதல் சுவரொட்டியை நடிகர் சூர்யா வெளியிட்டார். [1] இந்தப் படத்தின் திரை முன்னோட்டத்தில் கௌதம் மேனனின் குரல் இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ளார் கௌதம் மேனன். [2] இப்படத்தின் திரை முன்னோட்டம் 14, பிப்ரவரி 2018இல் வெளியானது.[3] இசைஇத்திரைப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். சான்றுகள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia