அக்காலத்தில் போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனிப் படைகளுடன் துணையுடன், போர்த்துக்கல்கத்தோலிக்க திருச்சபையினர்கோவா பகுதியில் வாழ்ந்த இந்து சமய மக்களை வலுக்கட்டாய கிறித்துவ சமயத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்தனர்.[3][note 1][5] இவ்வாறு மதமாற்றம் செய்யப்பட்ட பின்னரும் பல இந்துகளும் இஸ்லாமியர்களும் இரகசியமாக தமது மதங்களைக் கடைபிடித்தனர். இவ்வாறு இரகசியமாக இந்து வழிபாட்டு முறைகளை பின்பற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இந்துக்கள் மீது 1782-அம் ஆண்டு முதல் சமயக் குற்ற விசாரணை நடத்தி போர்த்துகேயர்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.[6][6][7][8] சிலர் மரண தண்டனைக்கும் ஆளானர்கள்[9][10] 12782 முதல் 1800-ஆம் ஆண்டு வரை மொத்தம் 16,172 இந்துக்கள் மற்றும் இசுலாமியர்கள் சமயக் குற்றவிசாரணை மன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டனர்.[11]
சமய நூல்கள் எரிப்பு
சமயக்குற்ற விசாரணை அதிகாரிகள் இரகசிய இந்துக்கள் மற்றும் முஸ்லீகள் மறைத்து வைத்திருந்த சமசுகிருதம், உருது, கொங்கணி மற்றும் ஆங்கில நூல்களை பறிமுதல் செய்து எரித்தனர்.[12]
சமயக் குற்றவிசாரணை முடிவு
1800-ஆம் ஆண்டில் போர்த்துகேய இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் குடிமை உரிமைகள் வழங்கப்பட்டதன் மூலம், கிறித்தவத்திற்கு கட்டாய மதம் மாற்றப்பட்ட இந்துக்கள் மற்றும் இசுலாமியர்களை, சமயக் குற்ற விசாரணைகள் மூலம் தண்டணை வழக்கம் முடிவுற்றது. 1812 இல் சமயக் குற்றவிசாரணை ஒழிக்கப்பட்டபோது கோவா சமயக் குற்றா விசாரணையின் பெரும்பாலான பதிவுகள் போர்த்துகீசியர்களால் எரிக்கப்பட்டன[7]. எனவே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் அறிய இயலாது.
சமயக் குற்ற விசாரணையில் தண்டிக்கப்பட்டவர்கள்
கிறித்துவத்திற்கு மாறிய பின்னரும் இந்து அல்லது இஸ்லாமிய பண்டிகைகளைக் கொண்டாடுவோரும், கிறித்துவர் அல்லாதவர்களை கத்தோலிக்க மதத்திற்கு மாற்றும் போர்த்துகீசிய முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள் மீதும் விசாரணைக்குழு வழக்குத் தொடுத்தது.[6] விசாரணைச் சட்டங்கள் இந்து மதம், இஸ்லாம் & யூத மதம் மற்றும் பழங்குடியான கொங்கனி மொழி மற்றும் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்துவதை கிரிமினல் குற்றமாக அறிவித்தது. கத்தோலிக்க திருச்சபையால் கிறித்துவத்திதற்கு மதம் மாறியவர்களில் 74% இரகசிய இந்துக்கள் என குற்றவிசாரணையில் முடிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. கிறித்துவத்திற்கு மதம் மாறிய இசுலாமியர்களில் 1.5% இரகசிய முஸ்லீம்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டணை வழங்கப்பட்டது.[13]
விசாரணைக்குப் பின்னான பாகுபாடு
கோவா சமயக் குற்றவிசாரணை 1812 இல் முடிவடைந்தாலும், போர்த்துகீசிய கிறிஸ்தவ ஆட்சியின் கீழ் இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு 1705 முதல் 1840 வரை செயல்படுத்தப்பட்ட ஜெண்டி (Xenddi) வரி போன்ற பிற வடிவங்களில் தொடர்ந்தது, ஜெண்டி வரியானது ஜிஸ்யா வரியை ஒத்தது[14][15][16]. 1838 ஆம் ஆண்டின் போர்த்துகீசிய அரசியலமைப்பு மற்றும் கோவா மற்றும் டாமோன் ஆகியவற்றின் போர்த்துகீசிய சிவில் கோட் மூலம் மதச்சார்பின்மை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மதப் பாகுபாடு முடிவுக்கு வந்தது.
கோவா சமயக் குற்றவிசாரணையால் தண்டிக்கப்பட்டவர்கள் (1782-1800)[note 2]
கோவாவில் 1583 சூலை 25 அன்று குடியேற்றக்கால போர்த்துக்கீச அரசு நிருவாகம் இந்துக் கோவில்களை அழித்தும், உள்ளூர் இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் இந்துக்கள் ஈடுபட்ட குங்கோலிம் கிளர்ச்சி செய்தனர்.[19] இக்கிளர்ச்சியின் போது குங்கோலிம் நகரில் கிறித்தவகுருமார்களும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
↑Daus (1983), "Die Erfindung", pp. 61-66(in German)
↑ 6.06.16.2ANTÓNIO JOSÉ SARAIVA (1985), Salomon, H. P. and Sassoon, I. S. D. (Translators, 2001), The Marrano Factory. The Portuguese Inquisition and Its New Christians, 1536–1765 (Brill Academic, 2001), pp. 345–353.
b^ In his 1731 letter to King João V, the Inquisitor António Amaral Coutinho states:[3]
“
The first and the principal cause of such a lamentable ruin (perdition of souls) is the disregard of the law of His Majesty, Dom Sebastião of glorious memory, and the Goan Councils, prohibiting the natives to converse in their own vernacular and making obligatory the use of the Portuguese language: this disregard in observing the law, gave rise to so many and so great evils, to the extent of effecting irreparable harm to souls, as well as to the royal revenues. Since i have been though unworthy, the Inquisitor of this State, ruin has set in the villages of Nadorá (sic), Revorá, Pirná, Assonorá and Aldoná in the Province of Bardez; in the villages of Cuncolim, Assolná, Dicarpalli, Consuá and Aquem in Salcette; and in the island of Goa, in Bambolim, Curcá, and Siridão, and presently in the village of Bastorá in Bardez. In these places, some members of village communities, as also women and children have been arrested and others accused of malpractices; for since they cannot speak any other language but their own vernacular, they are secretly visited by botos, servants and high priests of pagodas who teach them the tenets of their sects and further persuade them to offer alms to the pagodas and to supply other necessary requisites for the ornament of the same temples, reminding them of the good fortune their ancestors had enjoyed from such observances and the ruin they were subjected to, for having failed to observe these customs; under such persuasion they are moved to offer gifts and sacrifices and perform other diabolical ceremonies, forgetting the law of Jesus Christ which they had professed in the sacrament of Holy Baptism. This would not have happened had they known only the Portuguese language; since they being ignorant of the native tongue the botos, grous (gurus) and their attendants would not have been able to have any communication with them, for the simple reason that the latter could only converse in the vernacular of the place. Thus an end would have been put to the great loss among native Christians whose faith has not been well grounded, and who easily yield to the teaching of the Hindu priests.
”
↑Early texts use the term "the Roman fathers" for Jesuits. The first Jesuits arrived in Goa in 1540.[4]
↑The percent data includes those charged with Crypto-Hinduism and where the caste is identified. For about 50% of the victims, this data is unavailable.[13]
உசாத்துணை
Richard Zimler. Guardian of the Dawn (Delta Publishing, 2005).
Benton, Lauren. Law and Colonial Cultures: Legal Regimes in World History, 1400–1900 (Cambridge, 2002).
D'Costa Anthony, S.J. The Christianisation of the Goa Islands, 1510-1567 (Bombay, 1965).
Hunter, William W. The Imperial Gazetteer of India (Trubner & Co, 1886).
Priolkar, A. K. The Goa Inquisition (Bombay, 1961).
Sakshena, R. N. Goa: Into the Mainstream (Abhinav Publications, 2003).
Saraiva, Antonio Jose. The Marrano Factory. The Portuguese Inquisition and Its New Christians, 1536–1765 (Brill, 2001).
Shirodhkar, P. P. Socio-Cultural life in Goa during the 16th century.
மேலும் படிக்க
App, Urs. The Birth of Orientalism. Philadelphia: University of Pennsylvania Press, 2010 (hardcover, பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-0-8122-4261-4); contains a 60-page chapter (pp. 15–76) on Voltaire as a pioneer of Indomania and his use of fake Indian texts in anti-Christian propaganda.
Zimler, Richard. Guardian of the Dawn Constable & Robinson, (பன்னாட்டுத் தரப்புத்தக எண்1-84529-091-7) An award-winning historical novel set in Goa that explores the devastating effect of the Inquisition on a family of secret Jews.
↑Priolkar, Anant Kakba; Dellon, Gabriel; Buchanan, Claudius; (1961), The Goa Inquisition: being a quatercentenary commemoration study of the inquisition in India, Bombay University Press, p. 177