கோவில்பாளையம் ஊராட்சி (Kovilpalayam Gram Panchayat), தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4017 ஆகும். இவர்களில் பெண்கள் 2003 பேரும் ஆண்கள் 2014 பேரும் உள்ளனர்.
பெயர் காரணம்
கோவில்பாளையம், கௌசிக நதியோரத்தில் அமையப்பெற்ற நகரம். இந்நகரம் சத்தியமங்கலம் சாலை அருகில் உள்ளது. கோவில்பாளையத்தின் தபால் பெயர் சர்க்கரசமாகுலம் ஆகும். புராணகால கோவில்கள் நிறைய காணப்படுவதால் இந்நகருக்குக் கோவில்பாளையம் எனப் பெயர் வந்திருக்கலாம்.[7]
கோவில்களின் சிறப்பு
இங்குள்ள காலகாலேசுவரர் கோவிலில் சிவனை தரிசிக்கலாம். இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தக்க்ஷணாமூர்த்தி சிலை இங்கு உள்ளது. பிரதோஷ நாட்களில் மக்கள் பல மாவட்டங்களில் இருந்து இங்கு வருவது உண்டு. சூர சம்ஹாரம் இங்கு நிகழ்த்தப்படும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று.[7]
அடிப்படை வசதிகள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் |
எண்ணிக்கை
|
குடிநீர் இணைப்புகள் |
1022
|
சிறு மின்விசைக் குழாய்கள் |
1
|
கைக்குழாய்கள் |
5
|
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் |
4
|
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் |
2
|
உள்ளாட்சிக் கட்டடங்கள் |
4
|
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் |
2
|
ஊரணிகள் அல்லது குளங்கள் |
|
விளையாட்டு மையங்கள் |
|
சந்தைகள் |
|
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் |
59
|
ஊராட்சிச் சாலைகள் |
|
பேருந்து நிலையங்கள் |
|
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் |
|
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:
- காளியண்ணன் புதூர்
- முஸ்லீம் கோவில் பாளையம்
- கோவில் பாளையம் (மில்)
சான்றுகள்