கோ. கேசவன்
கோ. கேசவன் (5 அக்டோபர் 1946 - 16 செப்டம்பர் 1998) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், இதழாளர், தமிழ்ப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், மார்க்சிய அறிஞர், ஆய்வாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் ஆவார். தொடக்க வாழ்க்கைமதுரை மாநகரில் 5 அக்டோபர் 1946 அன்று பொன்னம்மாள்-கோவிந்தன் இணையருக்குப் பிறந்தார் கேசவன். தொடக்கக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை சேதுபதி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியிலும், பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு ஆகியவற்றை மதுரை தியாகராசர் கல்லூரியிலும் முடித்தார். சி. சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பணிகள்அரசுப்பணிகல்வியை நிறைவு செய்தபின் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் துறையில் மொழிபெயர்ப்பாளராகச் சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் திருச்சிராப்பள்ளி அரசினர் கலைக் கல்லூரி, புதுக்கோட்டை அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். இயக்கப் பணிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றினார். நூல்கள்
மொழிபெயர்ப்புகள்பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், பிரித்தானிய மார்க்சிய ஆய்வாளர் ஜார்ஜ் தாம்சனின் The Human Essence: The sources of science and art (1974) என்ற நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், மாரிஸ் கார்ன்போர்த்தின் லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். இதழியல்சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் இணைந்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் மக்கள் பண்பாடு, மனஓசை, புலமை, பாலம், கவி, கனவு, மறை அருவி, தோழமை, நிறப்பிரிகை, புதியன, இலக்கு, சிந்தனையாளன், பனிமலர் ஆகிய இதழ்களிலும் கட்டுரைகளை எழுதினார். கேசவன் ஆய்வுமுறைகேசவனின் ஆய்வுமுறை என்பது மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாத வழிப்பட்டது. "சமூக உற்பத்தி முறைதான் எல்லாவகையான சமூக உணர்வுகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை ஆகும். இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம் எனப்படுகிறது." "தத்துவ இயல், மதம், அறிவியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை, போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்பத் தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.” "அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையே ஒன்றோடொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. ஆகவே சமூக அடித்தளத்திற்கு ஒத்த மேல் கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை மேற்கட்டுமானம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அடித்தளம், மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்றுதான் மார்க்சியம் கூறுகிறது." இதுவே மார்க்சிய வழிப்பட்ட கோ.கேசவனின் ஆய்வுமுறை. பதவிகள்திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டத்தின் நடுவராகவும் செயல்பட்டார்.[2] மறைவு16 செப்டம்பர் 1998 அன்று மாரடைப்பால் தன் 52-ஆம் பிறந்தநாளுக்கு 18 நாள்கள் முன்னதாகவே மறைந்தார் கேசவன். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia