கௌதம புத்தரின் குடும்பம்![]() ![]() கௌதம புத்தரின் குடும்பம், கௌதம புத்தர் சாக்கிய குலத்தில், கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும், கிமு 563ல் மே மாத பௌர்ணமி வைசாகத்தில் லும்பினி நகரத்தின் பூங்காவில் பிறந்தார். கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழே நாட்களில், அவரது தாயார் மறைந்த பிறகு, தாயின் சகோதரியான மகாபிரஜாபதி கௌதமி, புத்தரை வளர்த்தார்.[1] உறவினர்கள்சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார். சீடர்கள்கௌதம புத்தர் ஞானம் அடைந்த பின்னர், புத்தரின் மனைவி யசோதரை, மகன் ராகுலன், சித்தி மகாபிரஜாபதி கௌதமி, மற்றும் நெருங்கிய உறவினர்களில் ஆனந்தர், நந்தன், மற்றும் தேவதத்தன் ஆகியோர் புத்தரின் முதன்மைச் சீடர்களாக விளங்கினர். மகாபிரஜாபதி கௌதமி, பிக்குணிகளின் தலைமை ஆசிரியராக செயல்பட்டார். பிக்குகளுக்கு ஆனந்தர் போன்றோர் வழிகாட்டிகளாக செயல்பட்டனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia