சங்கர் கோசு
பண்டிட் சங்கர் கோசு (Shankar Ghosh) (10 அக்டோபர் 1935 – 22 சனவரி 2016) இந்துஸ்தானி இசையின் பருகாபாத் கரானாவைச் (பாடும் பாணி) சேர்ந்த இந்திய கைம்முரசுக் கலைஞராவார். இவர் அவ்வப்போது இந்துஸ்தானி பாடகராகவும் இருந்தார். அதில் இவர் பாட்டியாலா கரானைவைப் பின்பற்றினார். [1] இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமியான சங்கீத நாடக அகாடமி, பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான 1999-2000 சங்கீத நாடக அகாடமி விருது இவருக்கு வழங்கியது. [2] ஆரம்பகால வாழ்க்கையும் பயிற்சியும்இவர் கொல்கத்தாவின் பண்டிட் கியான் பிரகாசு கோசின் கீழ் 1953 ஆம் ஆண்டில் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார். இவர் கைம்முரசு குழுமங்களின் கருத்துக்கு முன்னோடியாக இருந்தார். இதில் பல கைம்முரசு கலைஞர்கள் ஒரே தாளங்களை வாசிக்கும் ஒரு பாரம்பரியம் இவரால் முன்வைக்கப்பட்டது. [3] [4] தொழில்இவர் 1960களில் சரோத் மேதையான உஸ்தாத் அலி அக்பர் கானுடன் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கினார். மேலும் நல்ல வரவேற்பையும் பெற்றார். [5] [6] மேலும் பல ஆண்டுகளில் இவர் பண்டிட் ரவி சங்கர், உஸ்தாத் விலாயத் கான், பண்டிட் நிகில் பானர்ஜி, சரன் ராணி, பண்டிட் வி. ஜி ஜாக் ஆகியோருடனும் வெளிநாடுகளுக்கு சுற்றுப்ப யணம் மேற்கொண்டார். இந்தியாவில் இவர் உஸ்தாத் படே குலாம் அலிகான், பண்டிட் ஓம்கர்நாத் தாக்கூர், பண்டிட் வினாயக்ராவ் பட்வர்தன், கிரிஜா தேவி , பேகம் அக்தர் போன்றோர்களிடமும் தனது இசைப்பயணங்களை மேற்கொண்டார். இவர் வெளிநாட்டில் இருந்த காலத்தில் கிரெக் எல்லிஸ், பீட் லோக்கெட், ஜான் பெர்கமோ போன்ற கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[7] ஐ.டி.சி இசை ஆராய்ச்சிக் கழக விருது, உஸ்தாத் ஹபீஸ் அலிகான் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். மூன்று தசாப்தங்களாக கைம்முரசு கற்பித்த இவர், கொல்கத்தா, பாரிஸ் மற்றும் பான் போன்ற நாடுகளிலுள்ள நிறுவனங்களில் கற்பித்தார். தனிப்பட்ட வாழ்க்கைஇவர் பாட்டியாலா கரானாவின் இந்துஸ்தானி பாடகரான சஞ்சுக்தா கோசு என்பவரை மணந்தார். இவர்களுக்கு கைம்முரசு மேதையான விக்ரம் கோசு என்ற ஒரு மகன் இருந்தார். [8] [9] அலி அக்பர் கான், பண்டிட் ரவிசங்கர் போன்ற இசை மேதைகளுடன் தொடர்ந்து நிகழ்த்தினார்.. [10] இறப்புஇதயக் கோளாறு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 22 சனவரி 2016 அன்று இறந்தார். [11] மேலும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia