சந்திரநாத் சாத்திரி
பண்டிட் சந்திரநாத் சாத்திரி (Pandit Chandra Nath Shastri) ( 23 திசம்பர் 1948), தற்போது கொல்கத்தாவை தளமாகக் கொண்ட இந்தியாவின் முன்னணி கைம்முரசு இணைக் கலைஞர்களில் ஒருவராவார். இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் பனாரசு கரானா பாணியைச் சேர்ந்தவர். அனைத்திந்திய வானொலியின் ஓய்வு பெற்ற பணியாளர் கலைஞரான இவர், பொது-தொலைக்காட்சி ஒளிபரப்பாளராக தூர்தர்ஷனுக்காக தவறாமல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் ஒரு சோதிட நிபுணருமாவார்.[1] ஆரம்பகால வாழ்க்கையும், குடும்பமும்இவர்மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் தக்குரியா பகுதியில் நன்கு அறியப்பட்ட பிராமணக் குடும்பத்தில் பிறந்த இவர் ஒரு இசை சூழலில் வளர்க்கப்பட்டார். விரைவில் இவரது பெற்றோரும் குடும்பத்தினரும் வாரணாசிக்கு இடம் பெயர்ந்தனர். அங்கு இவர் பனாரசு கரானா பாணியில் பயிற்சி மேற்கொண்டார். கவிஞரும் பாடலாசிரியருமான இரவீந்திர நாத் தாகூரால் இவர் ஈர்க்கப்பட்டார். இவரது பாட்டி, திருமதி. இந்திரா தேவி ரவீந்திர நாத் தாகூரின் மருமகளாவார். இவரது தந்தை, மௌலிநாத் சாத்திரி, தொழில் ரீதியாக ஒரு மருத்துவராக இருந்தார். ஆனால் அவர் ஆன்மீக குருவாகவும், கைம்முரசு இணைக் கலைஞராகவும், இரவீந்திர நாத் தாகூரின் குரல் மாணவராகவும், முக்திஸ்னன் (1937), சஞ்சரினி (1963) போன்ற நாடகங்களில் இயக்கி நடித்துமிருந்தார்.[2][3] இவரது தாத்தா பிரியநாத் சாத்திரி விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் முதல் மூன்று அறங்காவலர்களில் ஒருவராவார்.[1] ![]() கல்விஇவர், தனது இடைநிலை பள்ளிப்படிப்பை உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில், சி. எம் ஆங்கிலோ பெங்காலி இன்டர் கல்லூரியில் முடித்தார். பின்னர் வாரணாசியின் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார்.[1] இசை வாழ்க்கைஇவரது தந்தை இவர் மிகச் சிறிய வயதிலிருந்தே இந்துஸ்தானி இசையில் ஆர்வம் காட்டியதைக் கண்டு, தபலாவில் சில தாளங்களை இசைக்கக் கற்றுக் கொடுத்தார். 5 வயதில் இவர் தனது குருவான பனாரசைச் சேர்ந்த பண்டிட் அனோகேலால் மிஸ்ரா பின்னர் அவரது மகன் பண்டிட் ராம்ஜி மிஸ்ரா ஆகியோரிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இளம் வயதிலேயே இவர் பண்டிட் மகாதேவ் பிரசாத் மிஸ்ரா, பண்டிட் கிஷன் மகாராஜ், பண்டிட் சம்தா பிரசாத், பண்டிட் சர்தா சகாய் மற்றும் உஸ்தாத் கராமத்துல்லா கான் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார் .[1] 23 வயதில் அனைத்திந்திய வானொலி நடத்திய ஒரு தேசியப் போட்டியில் வெற்றி பெற்றார். மேலும் சிறு வயதிலிருந்தே பெரும்பாலும் பண்டிட் என்ற தலைப்பால் குறிப்பிடப்பட்டார். இவர் ஒரு வானொலிக் கலைஞராகவும், இந்திய தேசிய தொலைக்காட்சியான தூர்தர்ஷன் கலைஞராகவும், மேடை நிகழ்த்தும் கலைஞராகவும் ஆனார். தொலைக்காட்சி, வானொலி மற்றும் மேடையில் வழக்கமான கலைஞராக, பல ஆயிரம் நிகழ்ச்சிகளையும் பதிவுகளையும் செய்துள்ளார்.[1] இப்போது இவர் அனைத்திந்திய வானொலியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். நிகழ்ச்சிகள்தபலா தனிப்பாடல்கள், தாளக் குழுக்கள் உட்பட பல இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும் இசைக்கலைஞர்களுடனும், பாடகர்களுடனும் சேர்ந்து, ஏராளமான இசை அமைப்பாளர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்களுடன் பணியாற்றினார். மேலும் இவர், பண்டிட் மகாதேவ் பிரசாத் மிசுரா, பண்டிட் வி. ஜி. ஜாக், உஸ்தாத் சாகிருதீன் கான், உஸ்தாத் இரசீத் கான், பண்டிட் இலால்மணி மிசுரா, புத்ததேவ் தாசு குப்தா, பண்டிட் ஞான பிரகாஷ் கோஷ், சாலில் சங்கர், பிதுசி பூர்ணிமா சென், சிங் பந்து சகோதரர்கள், பண்டிட் வி. பல்சரா, பண்டிட் இரமேசு மிசுரா, மணிலால் நாக், தேஜேந்திர மசூம்தார், தெபாசிசு பட்டாச்சார்யா மற்றும் பலருடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். இவர், பல இசை போட்டிகளையும், திறமை-வேட்டை போட்டிகளையும் தீர்மானித்தார். இவர் இந்திய இசையில் ஆராய்ச்சி மேற்கொண்டார். மேலும், இசையில் தனித்துவமான படைப்புகளைத் தயாரித்தார். குறிப்பாக தபலா துறையில். இவர் பகவாஜ், கோல், மிருதங்கம் மற்றும் பிற இந்திய தாள வாத்தியங்களில் நிபுணராகவும் உள்ளார்.[1] தனிப்பட்ட வாழ்க்கைஇவர் தபலா மற்றும் பிற இசைக்கருவிகள் கற்பிக்கிறார். மேலும் பல இசைப் பள்ளிகள், கல்விக்கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் கற்பித்து வருகிறார்.[4] இவர், ஆன்மிகத்தையும் படிக்கிறார். இவரது தந்தை, மறைந்த மருத்துவர் மௌலிநாத் சாத்திரி, ஆன்மீக குருவான பிஜாய் கிருஷ்ணா கோஸ்வாமியின் பெரும் சீடராகவும், கிரண் சந்த் தர்பேஷ் ஜி மகாராஜின் சீடராகவும் இருந்தார். இவர் இசைக்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்து இந்த தலைப்பில் ஆலோசனை வழங்குகிறார். இவர் ஒரு நிபுணர் சோதிடருமாவார். [1] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia