சச்சி (எழுத்தாளர்)
கே. ஆர். சச்சிதானந்தன் (K. R. Sachidanandan 1972 -18 ஜூன் ,2020) தொழில்முறை ரீதியாக இவர் சச்சி என அழைக்கப்படுகிறார். [1] இவர் ஓர் இந்தியத் திரைப்பட திரைக்கதையாளர், இயக்குநர், தயாரிப்பாளர். இவர் பெரும்பான்மையாக மலையாளத் திரைப்படங்களில் பனியாற்றுகிறார். [2] துவகத்தில் இவர் சச்சி-சேது எனும் இரட்டை எழுத்தாளர்களாக அறியப்பட்ட இவர் சாக்லேட் (2007), ராபின்ஹுட் (2009), மேக்கப்மேன் (2011) மற்றும் சீனியர்ஸ் (2012) ஆகிய திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றினர். 2012 ஆம் ஆண்டு ரன் பேபி ரன் திரைப்படத்தின் மூலம் திரைக்கதை எழுத்தாளராகவும், அனார்கலி (2015) படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். இவர் தக்காளி பிலிம்ஸ் எனும் தனது சொந்த நிறுவனத்தின் மூலம் செட்டாயீஸ் (2012) எனும் திரைப்படத்தை இணைந்து தயாரித்தார். அதைத் தொடர்ந்து ராமலீலா (2017), ஷெர்லாக் டாம்ஸ் (2017), மற்றும் டிரைவிங் லைசென்ஸ் (2019)[3] [4] ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார்.இவரது கடைசி படம் அய்யப்பனும் கோஷியும் (2020) ஆகும். இவர் ஜூன் 18, 2020 அன்று திருச்சூரில் உள்ள ஜூபிலி மிஷன் மருத்துவமனையில் இறந்தார். அப்போது அவருக்கு வயது 48 ஆகும். ஆரம்பகால வாழ்க்கைஇந்தியாவின் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்கல்லூரில் சச்சி பிறந்து வளர்ந்தார். மாலியங்கராவின் எஸ்.என்.எம் கல்லூரியில் வணிகத்தில் இளங்கலை பட்டமும், எர்ணாகுளத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பயின்றார் . கேரள உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழக்கறிஞராக எட்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார். கல்லூரியில் படித்த காலத்தில், சச்சி பல நாடகங்களையும் இயக்கியுள்ளார்.[சான்று தேவை] இறப்புதிருச்சூர் ஜூபிலி மிஷன் மருத்துவமனையில் இதய நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சச்சி 2020 ஜூன் 18 அன்று இறந்தார். அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் திரிசூரின் வடக்கஞ்சேரி, மேக்ஸ் கேர் மருத்துவமனையில் செய்யப்பட்ட இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களால் இதய நிறுத்தம் ஏற்பட்டது. [5] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia