சஞ்சய் லீலா பன்சாலி
சஞ்சய் லீலா பன்சாலி (Sanjay Leela Bhansali) (பிறப்பு:24 பிப்ரவரி 1963) ஓர் இந்திய இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளரும், இசை இயக்குநரும் ஆவார். இவர் இந்தி திரைப்படங்களில் பணிபுரிகிறர். ஐந்து தேசிய திரைப்பட விருதுகள், பதினொரு பிலிம்பேர் விருதுகள் மற்றும் ஒரு பாஃப்டா பரிந்துரை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளர்.[1] 2015ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கியது. பன்சாலி அறிமுக இயக்குநராக காமோஷி: தி மியூசிகல் (1996) என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், இதற்காக சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதைப் பெற்றார். வணிக ரீதியாக வெற்றிகரமான காதல் திரைப்படமான ஹம் தில் டி சுக் சனம் (1999), காவியக் காதல் படமான தேவ்தாஸ் (2002), பிளாக் (2005) போன்ற இந்தித் திரைபடங்களில் இவர் முக்கியத்துவம் பெற்றார் - இதற்காக இவர் ஆங்கில மொழி அல்லாத சிறந்த படத்திற்கான [2] பிரித்தானிய அகாதமியின் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி விருதுகளில் (பாஃப்டா) இவர் பல சிறந்த இயக்குநர் விருதுகளையும் சிறந்த திரைப்பட விருதுகளையும் பெற்றார், மேலும் பிலிம்பேர் விருதுகளில் சிறந்த படத்திற்கான கூடுதல் விமர்சகர்கள் விருதையும் பெற்றார். சாவரியா (2007) மற்றும் குசாரிஷ் (2010) போன்ற தொடர்ச்சியான வணிகரீதியாக தோல்வியுற்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இருப்பினும், குசாரிஷ் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia