சதாரம்
சதாரம் 1956-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] வி. சி. சுப்பராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நடிப்பு
தயாரிப்புசங்கரதாசு சுவாமிகள் புராணங்கள், இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளிலிருந்து கருப்பொருள்களைத் தேர்ந்தெடுத்து, இந்தியப் பெண்ணின் உன்னத பண்புகளை எடுத்துக்காட்டும் ஒரு பிரபலமான நாடகமாக இக்கதையை மேடையேற்றினார். பி. யு. சின்னப்பா இந்த நாடகத்தில் சிறு வயதில் ஒரு திருடனாக நடித்துப் பாராட்டு பெற்றார். இந்நாடகம் 1930 இல் ஓர் ஊமைப்படமாக தயாரிக்கப்பட்டது. பின்னர் 1935 இல் நவீன சதாரம் என்ற பெயரில் மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்ட்டிஸ்ட்ஸ் கார்ப்பரேசன் என்ற நிறுவனத்தினரால் பேசும் படமாகத் தயாரிக்கப்பட்டது. கே. சுப்பிரமணியம் இயக்கிய இந்தப் படத்தில் ஜி. பட்டு ஐயர், எஸ். எஸ். மணி பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, பார்வதிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். இதே கதை 1956 இல் மூன்றாவது தடவையாக வி. சி. சுப்பராமனின் முயற்சியில் தயாரிக்கப்பட்டது. பாடல்கள்சதாரம் திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி ஆகியோர் எழுதியிருந்தனர். கே. ஆர். ராமசாமி, பானுமதி, கே. சாரங்கபாணி, வி. கே. ராமசாமி, டி. எம். சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், ஜிக்கி, கே. ஜமுனா ராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பாடினர்.
மேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia