சந்திரதாரி அருங்காட்சியகம்
சந்திரதாரி அருங்காட்சியகம் இந்தியாவில் பீகாரில் உள்ள தர்பங்கா என்னுமிடத்தில் 1957 ஆம் ஆண்டில் மாநில அரசால் நிறுவப்பட்ட அருங்காட்சியகமாகும். முதலில் இந்த அருங்காட்சியகம் மன்சரோவர் ஏரியின் கிழக்குக் கரையில் அமைந்திருந்தது. 1974 ஆம் ஆண்டில் தற்போதைய இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. மதுபானியின் ஜமீன்தாராக இருந்த சந்திரதாரி சிங் என்பவருடைய தனிப்பட்ட சேகரிப்புகளைக்க் கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. சந்திரந்ததாரி அருங்காட்சியகம் [1] 7 டிசம்பர் 1957 இல் நிறுவப்பட்டது. முன்னதாக இந்த அருங்காட்சியகம் மிதிலா அருங்காட்சியகம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்த அருங்காட்சியகம் மதுபனி மாவட்டத்தைச் சேர்ந்த பிரதான நன்கொடையாளரான ரந்தி தோதியைச் சேர்ந்த நிலக்கிழாரான பாபு சந்திரஹேரி சிங் பெயர் மாற்றம் பெற்றது.அவர்களிடமிருந்து பெறப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் பாரம்பரிப் பொருள்களைக் கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. காட்சிப்பொருள்கள்சந்திரதாரி அருங்காட்சியகத்தில் உள்ள 11 காட்சிக்கூடங்களில் தொல்பொருள் மற்றும் கலைப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையைச் சார்ந்த கலைப்பொருட்கள் ஆகும். காட்சிப்படுத்தப்பட்டுள்ள கலைப் பொருள்களில் கண்ணாடியால் ஆன கவர்ச்சிகரமான கலைப்பொருட்கள், நெசவாளர்களின் அரிய மற்றும் அற்புதமான கலைப் படைப்புகள் மற்றும் வெவ்வேறு பாணிகளைச் சேர்ந்த அரிய சிறியவகை ஓவியங்கள் ஆகியவை அடங்கும். ஜெய்தேவின் கீத்-கோவிந்தாவை அடிப்படையாகக் கொண்ட கோபிகளுடன் உள்ள கிருஷ்ணா லீலா ஓவியம் இங்குள்ள ஓவியங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். மிகச் சிறந்த காவியமான ராமாயணத்தினை விவரிக்கும் ஓவியம் இந்த அரங்கில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய, நேபாள மற்றும் திபெத்திய பாணியில் அமைந்த பித்தளையால் செய்யப்பட்ட சிலைகளின் அற்புதமான தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. துர்கா, சூர்யா மற்றும் சிவபெருமானின் சிலைகள் மிகவும் கவர்ச்சிகரமானயாக உள்ளன. பௌத்தம் தொடர்பான சிலைகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இயற்கை வரலாறு என்ற தலைப்பில் அமைந்துள்ள கலைக்கூடப்பிரிவில் விலையுயர்ந்த கற்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் நூலக வசதிகளும் உள்ளன.[2] கண்ணாடி, துணி, உலோகம் போன்ற பலவாறானவற்றில் அமைந்த காவியக் கதைகள், கற்கள், போர்த் துப்பாக்கிகள் மற்றும் பிற சுவாரஸ்யமான கலைப்பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சந்திரதாரி என்பவர் அருகிலுள்ள மதுபனி என்ற நகரில் வசித்து வந்தார், அவரது குடும்பத்தினர் இந்த அருங்காட்சியகத்திற்காக அவரது சேகரிப்புகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர் இந்த அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வையாளர்களுக்காக காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். இங்கு பார்வையாளர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. நாட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் பலர் இந்த அருங்காட்சியகத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர். தர்பங்காவைச் சேர்ந்த மகாராஜா காமேஸ்வர் சிங் தனது பாரம்பரியத்தை பாதுகாத்து வந்துள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஜாகீர் ஹுசைன், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் மற்றும் அவரது மனைவி பிரதிஷ்தி, முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணா கோ, கற்பூரி தாக்கூர், முன்னாள் ஆளுநர் டாக்டர் ஏஆர் கித்வாய், டாக்டர் எல்.பி. ஷாஹி, ஜெகன்னாத் கவுஷல், நிதீஷ் குமார் உள்ளிட்ட பெருமக்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள 5,000 காடசிப்பொருள்களைக் கண்டுகளித்துச் சென்றுள்ளனர்.[3][4] மேலும் காண்க
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia