பிகார் அருங்காட்சியகம்
பிகார் அருங்காட்சியகம் (Bihar Museum) (இந்தி: बिहार संग्रहालय) இந்திய மாநிலமான பிகாரின் தலைநகரான பாட்னாவில் ஆகஸ்டு, 2015ல் திறக்கப்பட்ட கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாகும்.[2] [3] .[4] அமைவிடம்இவ்வருங்காட்சியகம் பாட்னா நகரத்தின் பெய்லி சாலையில், ஜவகர்லால் நேரு மார்க் பகுதியில் அமைந்துள்ளது. நவீன அருங்காட்சியகம்பிகாரின் தொல் வரலாற்றை விளக்கும் வகையில் ஏழு கலைக்கூடங்களின் தொகுதியான இவ்வருங்காட்சியகம், 517 கோடி செலவில் உலகத் தரத்தில் நவீனமயமாக்கப்பட்டு, 2.5 இலட்சம் சதுர அடியில், இரண்டு தளங்களுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட அருங்காட்சியகத்தை பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் 2 அக்டோபர் 2017ல் திறந்து வைத்தார். இப்புதிய அருங்காட்சியகம் பிகார் மாநிலத்தில் கலை, வரலாறு, தொல்லியலை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. புத்தர், மகாவீரர், நாளந்தா பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி முதன் முதலில் பிகாரின் சம்பராணில் துவக்கிய ஒத்துழையாமை இயக்க நிகழ்வுகள், சாணக்கியரின் தத்துவங்களும், மௌரியப் பேரரசு, பேரரசர் அசோகர் மற்றும் குப்தப் பேரரசுகளின் வரலாற்று நிகழ்வுச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது. 2,000 – 2300 ஆண்டுகளுக்கு முந்தைய அசோகர் காலத்திய யட்சினி சிற்பம், பிரித்தானிய இந்தியா ஆட்சியின் போது மொரிசியஸ், சுரிநாம், டிரினிடாட், டுபாகோ போன்ற நாடுகளுக்கு புலம் பெயர்ந்த பிகாரி மக்களின் வரலாற்றை காட்சிப்படுத்தும் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 171 பௌத்த பிக்குகளின் வெண்கலச் சிற்பங்களின் தொகுதி மற்றும் 6,000 கிலோ எடை கொண்ட புத்தரின் வெண்கலச் சிலை இவ்வருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. [5] நுழைவுக் கட்டணம்அருங்காட்சியகத்தை பார்வையிட பெரியர்களுக்கு ரூ. 100ம்; சிறுவர்களுக்கு ரூ. 50ம்; வெளிநாட்டவர்களுக்கு ரூ. 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia