சந்திர பானு குப்தா
சந்திர பானு குப்தா (Chandra Bhanu Gupta) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில முதல்வராக மூன்று முறை பணியாற்றியுள்ளார். 1902 ஆம் ஆன்டு சூலை மாதம் 14 ஆம் நாளன்று இவர் பிறந்தார்.[1] 1970 ஆம் ஆண்டுகளில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1980 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் பதினோராம் நாளன்று இவர் இறந்தார்.[2] ஆரம்ப கால வாழ்க்கைஅவர் 1902 ஆம் ஆண்டு அலிகார் மாவட்டத்தில் உள்ள அட்ரௌலி நகரத்தில் குப்தா பிறந்தார். 17 வயதில் இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். ரௌலட் எதிர்ப்பு மசோதா சீதாபூரில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.[3] 1929 ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியின் லக்னோ நகரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] சமூக பங்களிப்புலக்னோவில் பல்வேறு கல்வி, சமூக நலன் மற்றும் கலாச்சார மையங்களை நிறுவிய மோதிலால் நேரு நினைவு சங்கத்தின் முக்கிய சக்தியாக குப்தா இருந்தார். இதில் ரவீந்திரலயா, குழந்தைகள் அருங்காட்சியகம், பால் வித்யா மந்திர், லக்னோ ஆச்சார்யா நரேந்திர தேவ் விடுதி, ஓமியோபதி மருத்துவமனை, பல பட்டப் ஒஅடிப்பு கல்லூரிகள் மற்றும் லக்னோவில் உள்ள பொது நூலகம் ஆகியவை இப்பட்டியலில் அடங்கும்.[4] நிர்மல் சந்திர சதுர்வேதியிடம் தீவிரமாக ஆலோசனை பெற்று, நகரின் சமூக, கலாச்சார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை இவர் அறிமுகப்படுத்தினார். தேர்தல் அரசியல்சந்திர பானு குப்தா 1952 ஆம் ஆண்டில் லக்னோ நகர கிழக்கில் இருந்து உ.பி சட்டமன்றத் தேர்தலில் தனது எதிராகப் போட்டியிட்ட ஜனசங்கப் போட்டியாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். ஆனால் 1957 இல் அதே தொகுதியில் பொதுவுடமைக் கட்சியின் திரிலோகி சிங்கிடம் தோற்றார். பின்னர் அந்த சட்டமன்றத்தின் ஐந்தாண்டு கால ஆட்சியின் போதே இவர் முதலமைச்சரானார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றிருக்கலாம் அல்லது எம்எல்சி ஆகியிருக்கலாம். ஆனால் 1962 இல் ராணிகேத் தெற்கு தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனார். 1967 மற்றும் 1969 தேர்தல்களில், இவர் ராணிகேட் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்த திரிபுவன் நாராயண் சிங்கின் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்கும் அவர் முயற்சியை ஆதரித்தார், ஆனால் அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. [5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia