சமீர் ரஞ்சன் பர்மன்
சமீர் ரஞ்சன் பர்மன் (Samir Ranjan Barman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முதல் 1993 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் தேதி வரை இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். [2] [3] [4] [5] அகர்தலா தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவருமான சுதீப் ராய் பர்மனின் தந்தையாகவும் இவர் அறியப்படுகிறார். 1972 முதல் 2013 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பிசால்கர் தொகுதியில் தொடர்ந்து 9 தேர்தல்களில் போட்டியிட்டு, 1972, 1988, 1993, 1998 மற்றும் 2003 ஆம் ஆண்டு தேர்தல்களில் இவர் வெற்றி பெற்றார். 1993 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை திரிபுரா சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். திரிபுரா பிரதேச காங்கிரசு கமிட்டியின் முன்னாள் தலைவரும் இவர் இருந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia