சம்யுக்தா எக்டே
சம்யுக்தா ஹெக்டே (பிறப்பு 17 சூலை 1998) [1] என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவ்ர். இவர் குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படத்துறையில் நடிக்கிறார். இவர் ரிஷாப் செட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் ரக்ஷித் செட்டிக்கு ஜோடியாக ஆர்யா என்ற பாத்திரத்தில் நடித்தார், இதற்காக கன்னடத்தின் சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். எம்டிவி ரோடீஸ், பிக் பாஸ் கன்னடம் (2017) எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லா ஆகிய உண்மைநிலை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். ஆரம்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைசம்யுக்தா பெங்களூரில் ஒரு இந்து அவ்யக பிராமண தந்தைக்கும், கத்தோலிக்க தாய்க்கும் பிறந்தார்.[2] இவரது சொந்த கிராமமானது வடகன்னட மாவட்டத்தில் உள்ள கெலகினமனே ஆகும். புனித பால்ஸ் ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை படித்தார். ஸ்ரீ பகவன் மகாவீர் ஜெயின் கல்லூரியில் இளங்கலை உளவியல் மற்றும் இதழியல் படித்துவந்த நிலையில் தனது பட்டப்படிப்பை நிறுத்திவிட்டு, நடனத்ததையும், நடிப்பையும் தொடர்ந்தார்.[3] தொழில்2016 ஆம் ஆண்டில், தன் 17வது வயதில், ரக்சித் செட்டியின் நகைச்சுவை-நாடகப் படமான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, வணிக ரீதியான பெரிய வெற்றியையும் பெற்றது.[4] 2016 ஆம் ஆண்டில், எம்டிவி ரோடீஸ் என்ற என்ற உண்மைநிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எக்டே ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தனது குழந்தை பருவ கனவு என்று இவர் கூறினார்.[5] 2018 அக்டோபரில், எக்டே எம்டிவி ஸ்பிளிட்ஸ்வில்லாவில் அதன் பதினொன்றாவது பருவத்தில் ஒரு வைல்ட் கார்டு நுழைவு மூலம் நுழைந்து இரண்டாவது இடம் பெற்றார்.[சான்று தேவை] திரைப்படவியல்
தொலைக்காட்சி
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia