சரண் மாவட்டம்
சரண் மாவட்டம் (Saran District) வட இந்தியாவின் பிகார் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். சரண் கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத் தலைமையிடம் சாப்ரா நகரம் ஆகும் பொருளாதாரம்இந்தியாவில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 250 மாவட்டங்களில் ஒன்றாக இம்மாவட்டத்தை இந்திய அரசு 2006-ஆம் ஆண்டில் அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய 38 பிகார் மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நிதியுதவி செய்கிறது.[1] மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,022,821 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 91.06% மக்களும்; நகரப்புறங்களில் மக்களும் 8.94% வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.64% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 2,022,821 ஆண்களும் மற்றும் 1,929,041 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 954 பெண்கள் வீதம் உள்ளனர். 2,641 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 1,496 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 65.96% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.03% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 54.42% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 681,142 ஆக உள்ளது. [2] சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,534,772 (89.45 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 406,449 (10.28 %) ஆகவும், கிறித்தவ, சீக்கிய, பௌத்த, சமண சமய மக்கள் தொகை கணிசமாக உள்ளது. மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் 3,01,306 ஆக உள்ளனர். மொழிகள்பிகார் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், போஜ்புரி மொழி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் சாப்ரா, மர்கௌரா, சோன்பூர் என மூன்று வருவாய் உட்கோட்டங்களும்; ஊரக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற இருபது ஊராசி ஒன்றியங்களையும் கொண்டுள்ளது. அரசியல்இம்மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகள் வருமாறு; ஏக்மா, மஞ்சி, பனியாப்பூர், தாரியா, மர்கௌரா, சாப்ரா, கர்கா, அம்னௌர், பர்சா மற்றும் சோன்பூர். இம்மாவட்டத்தில் சரண் மற்றும் மகாராஜ்கஞ்ச் என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளது. கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள்கல்வி1. ஜெயப்பிரகாஷ் பல்கலைக்கழகம் 2. இராஜேந்திரா கல்லூரி 3. ராம் ஜெய்பால் கல்லூரி 4. ஜெகதம் கல்லூரி 5. பல்தொழில் நுட்பக் கல்லூரி, மர்கௌரா தொழில்1. சரண் பொறியியல் நிறுவனம், மர்கௌரா 2. சரண் மதுபான தொழிற்சாலை, மர்கௌரா 3. சர்க்கரை ஆலை, மர்கௌரா 4. இரயில் சக்கரம் தொழிற்சாலை, மர்கௌரா 5. இரயில் சக்கரம் தொழிற்சாலை, தாரியாப்பூர் 6. இரயில் பெட்டி தொழிற்சாலை, சோன்பூர் 7. இரயில் டீசல் இன்ஜின் தொழிற்சாலை, மர்கௌரா போக்குவரத்துசாலைப் போக்குரவரத்துநாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் இம்மாவட்டத்தை கடந்து செல்கிறது. அவைகள் வருமாறு;
தொடருந்துதில்லி - லக்னோ, கான்பூர் - பாட்னா - கொல்கத்தா நகரங்களை இணைக்கும் இருப்புப்பாதைகள் சாப்ரா தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது.[3] புகழ் பெற்றவர்கள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia